மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 நவ 2017

29 வகை காய்ச்சல்கள் உள்ளன!

29 வகை காய்ச்சல்கள் உள்ளன!

‘தற்போது காய்ச்சலில் 29 வகைகள் உள்ளன’ என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக டெங்குக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதைக் கட்டுப்படுத்த தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. மத்திய அரசிடமிருந்து நிதி உதவியும் கோரியுள்ளது.

இந்தச் சூழ்நிலையில் நேற்று (நவம்பர் 14) சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட தண்டையார் பேட்டை நேதாஜி நகர்ப்பகுதியில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளைக் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, முன்னாள் அமைச்சர் மதுசூதனன் ஆகியோர் பார்வையிட்டனர்.

ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “மழைநீர் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால், எதிர்க்கட்சிகள் எந்த வேலையும் நடக்கவில்லை என்று விமர்சனம் செய்து வருகின்றன. இது ஒருபுறமிருக்க மற்றொரு பக்கம் இந்தத் தொடர் மழை பெய்து கொண்டிருகிறது. மழை மட்டும் கொஞ்சம் ஒத்துழைப்புக் கொடுத்தால், சீரமைப்புப் பணிகளை வேகமாக முடித்து விடுவோம்” என்றார்.

மேலும் அவர், “தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் டெங்குக் காய்ச்சல் என்கிறார்கள். டெங்கு இந்தியா முழுவதும்தான் இருக்கிறது. மொத்தம் 29 வகையான காய்ச்சல்கள் இருப்பதாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள். எந்தக் காய்ச்சல் வந்தாலும் அதை டெங்கு என்று சொல்லி விடுகிறார்கள். சென்னையில் இவ்வளவு மழை பெய்தும் எந்த இடத்திலும் நோய்த்தொற்று இல்லை. அந்தளவுக்கு நாங்கள் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

புதன் 15 நவ 2017