மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 நவ 2017

பால் புளிக்காமல் இருப்பதற்கு - கிச்சன் கீர்த்தனா

பால் புளிக்காமல் இருப்பதற்கு - கிச்சன் கீர்த்தனா

வெளியூருக்குப் போய்விட்டு வீடு திரும்பினால் முதலில் கடுப்பாவது கிச்சனைப் பார்த்துதான். எந்தந்த பொருள்கள் வீணாகியுள்ளது என்பது முதல் காய்கறிகள் எப்படி... புளித்த தயிரை வெளியே ஊற்றுவது வரை அனைத்தையும் சமாளிக்கவும் சரி செய்யவும் வேண்டும். மேலும், அவ்வப்போது கிச்சனைத் தூய்மையாக வைத்துக்கொள்வதற்கான வழி முறைகளையும் கையாள வேண்டும்.

ஒரு முட்டையானது கெடாமல் புதியதாக இருக்கிறதா என்பதை அறிவதற்கு, அந்த முட்டையை குளிர்ந்த உப்பு தண்ணீரில் முழுகும்படியாக வைக்கவும். முட்டையானது முழுகாமல் மேலே வந்தால் அதை நீங்கள் தூக்கி எறியலாம். அது தண்ணீரில் மூழ்கினால் அதை சமையலில் பயன்படுத்தலாம்.

உருளைக்கிழங்குகளை வெங்காயங்களுடன் வைத்தால் அவை சீக்கிரமாக கெட்டுப் போய்விடும். அவ்வாறு அவை கெடாமல் இருப்பதற்கு, அந்த உருளைக்கிழங்குகள் இருக்கும் பைக்குள் ஒரு ஆப்பிள் பழத்தை வைக்கவும்.

பால் புளிக்காமல் இருப்பதற்கு, ஏலக்காயைப் பால் காய்ச்சும்போதே அதனுடன் சேர்க்கவும். அவ்வாறு செய்தால் நீண்ட நேரத்துக்குப் பால் புளிக்காமல் இருக்கும்.

தோல் உரித்த உருளைக்கிழங்குகளைக் கெடாமல் வைப்பதற்கு சில துளிகள் வினிகரால் தெளித்து ஃப்ரிட்ஜில் அதை வைக்கவும்.

முட்டைகளை 30-40 நாள்கள் வரை கெடாமல் வைப்பதற்கு, அதன் மேல் ஒரு பிரஷ்ஷால் சமையல் எண்ணெயைத் தடவவும்.

சுண்டல் முதலிய அயிட்டங்கள் செய்ய பட்டாணி, கொண்டைக்கடலை, மொச்சை போன்றவற்றை ஊறவைக்க மறந்து விட்டீர்களா? கவலை வேண்டாம். ஒரு வாணலியில், எண்ணெய் ஊற்றாமல் கடலை வகைகளை நன்கு வறுத்துக் கொள்ளுங்கள். மற்றொரு பக்கத்தில் இரு மடங்கு தண்ணீரைக் கொதிக்க வையுங்கள். வறுத்த கடலையில் கொதிக்கும் நீரை விட்டு வழக்கம்போல குக்கரில் வேக வைத்தால், நன்கு வெந்துவிடும்.

நெல்லிக்காய், கோவக்காய், புடலை போன்றவைகளை மென்மையான ஸ்கிரப் பேடு பயன்படுத்தி தேய்த்து கழுவுங்கள். பின்பு மேற்கண்ட ஏதாவது ஒரு திரவத்தில் பத்து நிமிடம் முக்கிவைத்துவிட்டு, துடைத்துப் பயன்படுத்துங்கள்.

மல்லித்தழையில் வேர் பகுதியை நீக்கிவிட்டு, சமையலுக்கு பயன்படுத்தும் பகுதியை மட்டும் தனியாக கிள்ளி எடுங்கள். அதை டிஸ்யூ பேப்பரிலோ, காற்று புகத்தகுந்த காட்டன் துணியிலோ சுற்றி, பிளாஸ்டிக் பாத்திரத்தில் கொட்டி ஃப்ரிட்ஜில் வைத்திருங்கள். உபயோகப்படுத்துவதற்குப் பத்து நிமிடங்களுக்கு முன்பு வினிகர் கலவையில் முக்கிவைத்து, பின்பு பலமுறை தண்ணீரில் கழுவி பயன்படுத்துங்கள். உப்பு கரைசலிலும் இதனை முக்கிவைத்து பயன்படுத்தலாம்.

கீர்த்தனா சிந்தனைகள்:

வாழ்ந்து உயர்ந்துவிட்டால் பொறாமையில் பேசுவார்கள். தாழ்ந்து வீழ்ந்துவிட்டால் கேவலமாகப் பேசுவார்கள். மொத்தத்தில் ஏதாவது பேசிக்கொண்டேதான் இருப்பார்கள். நாம நம்ம வேலையைப் பார்ப்போம்.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

புதன் 15 நவ 2017