மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 நவ 2017

பொருளாதாரச் சீரமைப்பில் இந்தியா: மோடி பேச்சு!

பொருளாதாரச் சீரமைப்பில் இந்தியா: மோடி பேச்சு!

‘பணமதிப்பழிப்பைத் தொடர்ந்து ஜி.எஸ்.டி. சேவை மற்றும் பணப்பரிவர்த்தனைகளுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டதே நாட்டின் பொருளாதாரச் சீரமைப்புக்கு முக்கியக் காரணம்’ எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு (ASEAN) மாநாடு பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரான மணிலாவில் நவம்பர் 10ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, “பணப் பரிவர்த்தனைகள் மற்றும் வரிச் செலுத்த எங்களது நாட்டில் தனிப்பட்டவொரு முறையைக் கடைப்பிடிக்கிறோம். இதன் நோக்கம் மற்றும் முடிவுகள் முன்பே கணிக்கப்பட்டதுதான். பணமதிப்பழிப்பு நடவடிக்கையை மேற்கொண்டதன் மூலம் பணத்தின் மதிப்பை அதிகரித்து இந்தியப் பொருளாதாரத்தில் பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளோம்.

தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் அரசியல் ரீதியாகவும், அனைத்து நாட்டு மக்களுக்கிடையே நட்பு ரீதியாகவும் இந்தியாவுக்குச் சுமுகமான உறவு நீடிக்கிறது. இந்த நிலையில் தற்போது பொருளாதார மற்றும் வர்த்தக ரீதியான உறவுகளை மேம்படுத்த முயற்சி செய்து வருகிறோம். கடந்த மூன்றாண்டுகளில் அந்நிய நாடுகள் முதலீடு செய்யும் முறையை எளிதாக்கி, காலாவதியான 1200க்கும் மேற்பட்ட சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன” என்று பேசினார்.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

புதன் 15 நவ 2017