மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 நவ 2017

நரகாசுரன் படப்பிடிப்பு நிறைவு!

நரகாசுரன் படப்பிடிப்பு நிறைவு!

அரவிந்த் சாமி நடிக்கும் நரகாசுரன் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளதாக கௌதம் மேனன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்

ரகுமானின் துருவங்கள் பதினாறு படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘நரகாசூரன்’. இதை ‘ஷர்தா என்டர்டெயின்மென்ட்’ நிறுவனத்துடன் இணைந்து இயக்குநர் கெளதம் மேனன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ஒன்றாக என்டர்டெயின்மென்ட்’ மூலம் தயாரிக்கிறார். இதில் கதாநாயகனாக அரவிந்த் சாமி நடிக்கிறார். முக்கிய வேடங்களில் மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமாரன், சந்தீப் கிஷன், ஸ்ரேயா, ஆத்மிகா ஆகியோர் நடிக்கின்றனர்.

இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வந்தது. தற்போது, படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளதாகத் தயாரிப்பாளர் கெளதம் மேனனே தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மொத்த படப்பிடிப்பும் 41 நாள்களில் முடிக்கப்பட்டுள்ளது என்று அதில் அவர் குறிப்பிட்டுள்ளார். படத்தை அடுத்த ஆண்டு (2018) பிப்ரவரி மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

புதன் 15 நவ 2017