மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 நவ 2017

ஹெல்மெட்டுக்குக் கோயில் கட்டிய பஞ்சாயத்து ஊழியர்!

ஹெல்மெட்டுக்குக் கோயில் கட்டிய பஞ்சாயத்து ஊழியர்!

சித்தூர் மாவட்டத்தில் விபத்து உயிரிழப்புகளைத் தடுக்க அனைவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி பஞ்சாயத்து ஊழியர் ஒருவர் ஹெல்மெட்டுக்குக் கோயில் அமைத்துள்ளது ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

சித்தூர் மாவட்டம் வெங்கடராஜூல கண்டிகை பகுதியைச் சேர்ந்த, சத்தியவேடு பஞ்சாயத்து அலுவலக ஒப்பந்த ஊழியரான கோபி, அங்குள்ள காந்தி சிலை அருகே ஹெல்மெட்டுக்குக் கோயில் அமைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், “கடந்த வாரம் ஊத்துக்கோட்டை சாலை வழியாக எனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென சாலையில் மாடுகள் புகுந்தது. அப்போது பைக் எனது கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறியது. அப்போது கீழே விழுந்ததில் எனக்குப் படுகாயம் ஏற்பட்டது. தலையில் ஹெல்மெட் அணிந்திருந்ததால் உயிர் பிழைத்தேன். ஹெல்மெட் அணியாமல் சென்றிருந்தால் நான் நிச்சயமாக பிழைத்திருக்க மாட்டேன்.

எனவே, என்னுடைய உயிரைக் காப்பாற்றிய ஹெல்மெட்டுக்குக் கோயில் கட்ட முடிவு செய்தேன். மேலும், என்னை அனைவரும் ஒரு உதாரணமாகக்கொண்டு ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தவும் இந்தக் கோயிலைக் கட்டியுள்ளேன்” என்று அவர் தெரிவித்தார்.

ஹெல்மெட்டுக்காகக் கோயில் கட்டியதால் அப்பகுதியில் செல்லும் பொதுமக்கள் அனைவரும் அதை ஆச்சர்யமாகப் பார்த்தபடி செல்கின்றனர்.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

புதன் 15 நவ 2017