மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 நவ 2017

பியூட்டி ப்ரியா

பியூட்டி ப்ரியா

உலகில் எந்த இடத்தில் இருந்தாலும் பெண்கள் அவர்களை அழகுபடுத்தி அதில் மகிழ்ச்சி காண்பார்கள். அதற்காக என்ன விலை கொடுத்தாலும் அழகு சாதனப் பொருள்களைப் பெற்றுக்கொள்ளத் துடிப்பார்கள். என்னன்ன பொருள்களில் என்னன்ன சத்துகள் உள்ளன என தெரிந்துகொண்டு நாமும் பின்பற்றி பளிச்சிடலாமே...

ஒவ்வொரு வைட்டமின்னுக்கும் உடலைக் கட்டுப்படுத்தும் பல வேலைகள் இருக்கின்றன. இதனால் ஒன்று குறைந்தாலும் சமநிலை இழப்பு ஏற்படும். பி வைட்டமின்கள் நீரில் கரையக் கூடியவை. அதனால் உடலில் சேமித்து வைக்க முடியாது என்பதால் தினமும் அவற்றை சாப்பிட வேண்டியது கட்டாயமாகிறது.

சிறுவயதிலேயே முதிய தோற்றம் ஏற்படுவதை தயமின் என்ற பி1 வைட்டமின் தடுக்கும். வைட்டமின் பி1 சிவப்பு அரிசி, கோதுமை, ஈஸ்ட், ஓட்மீல், சோயா பீன்ஸ், முந்திரி போன்றவற்றில் கிடைக்கிறது.

தோல் மற்றும் உடலில் உள்ள எல்லா செல்களும் புதுப்பிக்கப் பயன்படும் ரிபோபிளேவின் என்ற வைட்டமின் பி2 பால், முட்டை, இறைச்சி, கல்லீரல், தானியங்கள், பச்சை காய்கறிகளில் கிடைக்கின்றன.

செல் மெட்டாபாலிசம், கார்போஹைட்ரேட் கிரகிப்புக்கு நியாசின் என்ற வைட்டமின் பி3 தேவை. இதன் மூலம் ஆற்றல் கிடைப்பதோடு, இறந்த செல்கள் அழிக்கப்பட்டு அவை நீக்கப்பட்டு, புது செல்கள் உருவாக்கும் மீன், கோழி இறைச்சி, கோதுமை, சிவப்பு அரிசியில் இந்த வகை வைட்டமின் கிடைக்கிறது.

சுழற்சியை தடுத்து, கொழுப்பு உடைதலை வேகமாக்கி பருக்கள் உருவாகாமல் தடுக்கிறது வைட்டமின் பி5 மக்காச்சோளம், முட்டை, சீஸ், இறைச்சி, தக்காளியில் கிடைக்கிறது.

தோலின் எண்ணெய் பசைமிக்க பகுதிகளில் செதில் உரியும் நோயை சரிசெய்ய உதவுவது முழு தானியங்கள். கல்லீரல், பயறுகள், வாழைப்பழம் போன்றவற்றில் கிடைப்பது பைரிடாக்சின் என்ற வைட்டமின் பி6 ஆகும்.

உங்களை இனி வைட்டமின் பேரழகியே வருகவே என வர்ணித்திடும் காலம் வெகு தொலைவில் இல்லை.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

புதன் 15 நவ 2017