மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 நவ 2017

நவீன இயர் பட்ஸ்!

நவீன இயர் பட்ஸ்!

ஹெட்போன்கள் மற்றும் ஒலி தொடர்பான கருவிகளைத் தயாரிக்கும் Bose நிறுவனம் புதிதாக வயர் லெஸ் இயர் பட்ஸ் ஒன்றைக் கண்டறிந்துள்ளது. Indiegogo என்ற உதவிக் குழுவிடம் இதற்கான உதவியைப் பெற்று இந்த புதிய இயர் பட்ஸ்ஸை உருவாக்கி உள்ளது.

இந்த இயர் பட்ஸ்ஸானது தூங்குவதற்கு முன்னர் இதைக் காதுகளில் மாட்டிக்கொண்டு தேவையான பாடல்களை இசைத்துக் கொள்ளலாம். வெளிப்புற சப்தங்கள் அதிக கேட்காமல் இருக்கும் வண்ணம் புதிய தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த இயர் பட்ஸ் பயன்படுத்தி உறங்கும் வேளையில் வேறு எந்த சப்தங்களும் தூக்கத்தை இடையூறு செய்யாமல் இருக்க உதவுகிறது. ஆனால், நமக்கு தேவையான நேரத்துக்கு இதில் அலாரம் செட் செய்துகொள்ள முடியும். அதனால் மற்றவர்களுக்குக் கேட்காமல் அலாரம் பயன்படுத்தும் நபரை மட்டும் எழுப்ப உதவுகிறது.

Bose நிறுவனம் இதுவரை பல்வேறு விதமான ஒலி கருவிகளைத் தயாரித்திருந்தாலும், இந்த இயர் பட்ஸ் மிக புதுமையான ஒன்றாக உள்ளது. இதன் விலை மற்றும் வெளியீடு குறித்த எந்தவித தகவலும் வெளியாகவில்லை. காதுகளில் மிக சரியாக பொருந்தும் விதத்தில் இந்த இயர் பட்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்வதன் மூலம் இரண்டு இரவுகள் தொடர்ச்சியாக இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த இயர் பட்ஸ் உடன் ஒரு சார்ஜிங் கேஸ் ஒன்று வழங்கப்படும். இயர் பட்ஸ் பயன்படுத்தாதபோது அதில் வைத்துவிட்டால் தானாக சார்ஜ் செய்துகொள்ளும்.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

புதன் 15 நவ 2017