மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 நவ 2017

ஏசியான் தலைவர்களுக்கு மோடி அழைப்பு!

ஏசியான் தலைவர்களுக்கு மோடி அழைப்பு!

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடந்துவரும் ஏசியான் (தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு) மாநாட்டில் கலந்து கொண்டிருக்கிறார் இந்தியப் பிரதமர் மோடி. வரும் ஜனவரி மாதம் நிகழும் குடியரசு தின கொண்டாட்டத்தில் பங்கேற்க அந்த நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ஏசியான் தொடங்கி 50 ஆண்டுகள் ஆகிறது. இதனையொட்டி, பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் மூன்று நாள்கள் உச்சி மாநாடு நவம்பர் 13ஆம் தேதி தொடங்கியது. இதில் இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று வருகின்றனர்.

நேற்று (நவம்பர் 14) நடந்த ஏசியான் – இந்தியா மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுப் பேசினார். அப்போது, வரும் ஜனவரி 26ஆம் தேதி நடைபெறவுள்ள 69ஆவது குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள ஏசியான் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்புவிடுத்தார். “இந்தியாவில் வசிக்கும் 125 கோடி மக்களும் உங்களை வரவேற்க ஆவலோடு இருக்கின்றனர். நமது பொதுவான நோக்கத்தை உணர்ந்து, இணைந்து பணியாற்றத் தயாராகவுள்ளேன்” என்றார்.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

புதன் 15 நவ 2017