மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 நவ 2017

ஹெல்த் ஹேமா - வாய்ப்புண், உதடு வெடிப்பு குணமாக பாட்டி வைத்தியம்!

ஹெல்த் ஹேமா - வாய்ப்புண், உதடு வெடிப்பு குணமாக பாட்டி வைத்தியம்!

1. கோவக்காயில் சாம்பார், கூட்டு செய்து சாப்பிட வயிற்றுப்புண், வாய்ப்புண், உதடுவெடிப்பு குணமாகும்.

2. சீரகத்தை சம அளவு நாட்டு சர்க்கரையுடன் பொடித்து காலை மாலை ஒரு தேக்கரண்டி சாப்பிட உதடு வெடிப்பு, உதட்டுப்புண் குணமாகும்.

3. திருநீற்றுப்பச்சை நான்கு இலைகளை மென்று சாற்றை விழுங்க வாய்ப்புண் குணமாகும்.

4. ஒருபிடி நெல்லியிலைகளை நன்கு கொதிக்க வைத்து இளம்சூட்டில் வாய் கொப்புளிக்க வாய்ப்புண் குணமாகும்.

5. மணத்தக்காளி இலைகளை நெய்யில் வதக்கி துவையல் செய்து சாப்பிட வாய்ப்புண் குணமாகும்.

6. மணத்தக்காளி இலைகளை மென்று சாற்றை ஒரு நாளைக்கு ஆறு முறை விழுங்கி வர வாய்ப்புண் குணமாகும்.

7. மருதாணி இலைகளை ஒரு மணி நேரம் ஊறவைத்து காய்ச்சிய கஷாயத்தால் வாய்க் கொப்புளிக்க வாய்வேக்காடு, வாய்ப்புண், தொண்டைப்புண் ஆறும்.

8. ஆவாரைப் பட்டையைப் பொடித்துச் கஷாயமிட்டு வாய்க்கொப்புளிக்க வாய்ப்புண், வாய் துர்நாற்றம் நீங்கும்.

9. சிவனார்வேம்பு வேரால் பல் துலக்கிவர பல்வலி, ஈறுவீக்கம், வாய்ப்புண் குணமாகும்.

10. கொய்யா இலைகளை மென்று பல் தேய்க்க பல்வலி, வாய்ப்புண் குணமாகும்.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

புதன் 15 நவ 2017