மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 நவ 2017

வைரமுத்து வரியில் துல்கர்

வைரமுத்து வரியில் துல்கர்

துல்கர் சல்மான் நடிக்கும் புதிய படத்துக்குக் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

துல்கர் சல்மான் நடித்து சமீபத்தில் தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியான படம் சோலோ. இந்தப் படத்தை பிஜாய் நம்பியார் இயக்கியிருந்தார். இதையடுத்து தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ள புதிய படமொன்றில் நடிக்கிறார் துல்கர் சல்மான். இதில் துல்கருக்கு ஜோடியாக ரித்து வர்மா நடிக்கவுள்ளார்.

தற்போது இந்தப் படத்துக்குக் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகச் சமுக வலைதளங்களில் தகவல் வெளியாகியுள்ளது. இது இயக்குநர் மணிரத்னம் இயக்கிய திருடா திருடா படத்தில் வைரமுத்து எழுதிய பாடல் வரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. டி.இமான் இசையமைக்கவுள்ள இந்தப் படத்துக்கு குற்றம் 23 ஒளிப்பதிவாளர் கே.எம்.பாஸ்கரன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக இருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பை இன்று (நவம்பர் 15ஆம் தேதி) முதல் டெல்லியில் தொடங்கத் திட்டமிட்டுள்ளார்கள். இந்தப் படம் குறித்த உறுதியான தகவல் இன்னும் வெளிவராத நிலையில் விரைவில் அதிகாரபூர்வத் தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

புதன் 15 நவ 2017