மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 நவ 2017

தீவிரத் தேர்தல் பிரசாரத்தில் மோடி!

தீவிரத் தேர்தல் பிரசாரத்தில் மோடி!

தற்போது ஏசியான் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிலிப்பைன்ஸ் சென்றுள்ள பிரதமர் மோடி, அடுத்த வாரத்திலிருந்து குஜராத் மாநில தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபடவுள்ளார்.

குஜராத் மாநிலச் சட்டமன்றத் தேர்தல் வரும் டிசம்பர் 9 மற்றும் 14 தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில் பெரும் வெற்றி பெறுவதற்காக, கடந்த ஆறு மாத காலமாக தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது பாஜக. தனது சொந்த மாநிலத்தில் ஆறாவது முறையாக பாஜக ஆட்சியைப் பிடித்திட வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி.

கடந்த மாதம் குஜராத் மாநிலத் தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொண்டவர், தற்போது ஏசியான் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவுக்குச் சென்றுள்ளார். மாநாடு முடிந்து இந்தியா திரும்பியதும், அவர் தீவிரமாகத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவார் என்று அறிவித்திருக்கிறது பாஜக.

சமீபத்தில் வெளியான ஒரு கருத்துக்கணிப்பு, வடக்கு குஜராத், சவுராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதிகளில் காங்கிரஸின் செல்வாக்கு அதிகரித்திருப்பதாகக் கூறியது. இதனையடுத்து, தேர்தல் பிரசார யுக்திகளில் பல மாற்றங்களை பாஜக மேற்கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. தேர்தல் பிரசாரத்தைத் திட்டமிட்டு மேற்கொள்வதற்காக, மத்திய அமைச்சர்கள் 30 பேர் குஜராத்தில் முகாமிட்டிருக்கின்றனர். பாஜக தலைவர் அமித் ஷா குஜராத்தை விட்டு எங்கும் நகரவில்லை. மோடியின் அதிரடி பிரசாரம், குஜராத் மண்ணில் மீண்டும் ஆளும் வாய்ப்பைத் தரும் என்று நம்புகிறது பாஜக தரப்பு.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

புதன் 15 நவ 2017