மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 நவ 2017

மொத்த விலைப் பணவீக்கம் 3.59% உயர்வு!

மொத்த விலைப் பணவீக்கம் 3.59% உயர்வு!

கடந்த அக்டோபர் மாதத்தில் இந்தியாவின் மொத்த விற்பனை விலைப் பணவீக்கம் 3.59 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தகர்களால் மொத்த விலைக்கு வாங்கப்படும் பொருள்களின் விலை மாற்றம் குறித்து கணக்கிடப்படும் மொத்த விற்பனை விலைப் பணவீக்கம் 2016ஆம் ஆண்டின் அக்டோபர் மாதம் 1.27 சதவிகிதமாக இருந்தது. அது 2017 அக்டோபரில் 3.59 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இதற்கு முந்தைய செப்டம்பர் மாதத்தில் பணவீக்க விகிதம் 2.6 சதவிகிதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. உணவுப் பொருள்களின் விலை அக்டோபர் மாதத்தில் 4.30 சதவிகிதம் உயர்ந்ததன் காரணமாகவே மொத்த விற்பனை விலைப் பணவீக்கம் உயர்ந்துள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை வாயிலாகத் தெரிகிறது.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

புதன் 15 நவ 2017