மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 நவ 2017

ராஜஸ்தான் காவல்துறையில் திருநங்கை!

ராஜஸ்தான் காவல்துறையில் திருநங்கை!

ராஜஸ்தானில் பெரும் நீதி போராட்டத்துக்குப் பிறகு காவல்துறையில் கங்கா குமாரி என்ற திருநங்கை பணியமர்த்தப்பட்டுள்ளார்.

பாலின பாகுபாடு காரணமாக மூன்றாம் பாலினத்தவர்கள் தங்களது தகுதியையும் அடையாளத்தையும் வெளிப்படுத்தப் பெரிதும் போராடுகின்றனர். கல்வி, வேலைவாய்ப்பு என ஒவ்வொரு கட்டத்திலும் போராடிய பிறகே அவர்களால் வெற்றிபெற முடிகிறது.

சேலத்தைச் சேர்ந்த திருநங்கை பிரித்திகா யாஷினி இந்தியாவிலேயே காவல்துறையில் முதன்முறையாக சப்-இன்ஸ்பெக்டராக பணியமர்த்தப்பட்டார். இவருக்கு எளிதாக வேலை கிடைக்கவில்லை. தனது கனவு நிறைவேற பல்வேறு நீதி போராட்டங்களைச் சந்தித்து அதன் பிறகே பணியில் சேர்க்கப்பட்டார். அதுபோன்று ராஜஸ்தானில் முதன்முறையாகத் திருநங்கை ஒருவர் காவல்துறையில் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டத்தைச் சேர்ந்த கங்கா குமாரி என்பவர் 2015ஆம் ஆண்டு அம்மாநிலத்தில் நடைபெற்ற காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்றார். மருத்துவப் பரிசோதனையின்போது அவர் திருநங்கை என்பது தெரியவந்ததால் அம்மாநில காவல்துறை கங்கா குமாரிக்கு வழங்க வேண்டிய பணி நியமன ஆணையை நிராகரித்தது

இந்த நிலையில் காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்றும் பாலின பாகுபாடு காரணமாகத் தன்னை நிராகரித்ததாக அவர் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த மனு நீதிபதி தினேஷ் மேதா அமர்வு முன்பு நேற்று (நவம்பர் 14) விசாரணைக்கு வந்தது. அப்போது கங்கா குமாரியை வருகிற ஆறு மாதத்துக்குள் காவலராக நியமிக்க வேண்டும் என்றும் எந்த ஒரு மனிதனிடமும் பாலின பாகுபாடு காட்டக் கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

புதன் 15 நவ 2017