மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 நவ 2017

பிளாஸ்டிக்: வரிக் குறைப்புக்கு வரவேற்பு!

பிளாஸ்டிக்: வரிக் குறைப்புக்கு வரவேற்பு!

சமீபத்தில் நடைபெற்ற ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வரிக் குறைப்பு நடவடிக்கையை பிளாஸ்டிக் தொழில் துறையினர் வரவேற்றுள்ளனர்.

நவம்பர் 10ஆம் தேதியன்று கவுகாத்தியில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் மாநில நிதியமைச்சர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். கூட்டத்தில், அன்றாட வாழ்வுக்குப் பயன்படும் சுமார் 178 பொருள்களுக்கான வரி விகிதம் குறைக்கப்பட்டது. பல பிளாஸ்டிக் பொருள்களுக்கான வரி விகிதம் 28 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் நுகர்வோர் பயனடைவதோடு உள்நாட்டுச் சந்தையில் உற்பத்தியாளர்களிடையேயான போட்டி வலுப்பெறும் என்று பிளாஸ்டிக் தொழில்துறை சார்பாகக் கூறப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டி. கவுன்சிலின் இந்த அறிவிப்பால் பிளாஸ்டிக் ஃப்ளோரிங், ஃபேப்ரிக், ஃபர்னிச்சர் உள்ளிட்ட பல பிளாஸ்டிக் பொருள்களின் விலை குறையும் என்று இந்திய பிளாஸ்டிக் தொழில்துறையின் தலைமை அமைப்பான ‘பிளாஸ்ட் இந்தியா ஃபவுண்டேஷன்’ கூறியுள்ளது. பிளாஸ்ட் இந்தியா ஃபவுண்டேஷனின் தலைவர் கே.கே.செக்சரியா பேசுகையில், “பிளாஸ்டிக் பொருள்கள் மீதான ஜி.எஸ்.டி. வரி விதிகங்களில் உள்ள முரண்பாடுகளை அரசு நீக்கியது மிகச் சரியான நடவடிக்கையாகும்” என்று கூறினார்.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

புதன் 15 நவ 2017