மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 நவ 2017

ஏழு ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

ஏழு ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

தமிழகம் முழுவதும் ஏழு ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார்.

அதிகாரிகளின் பெயர் மற்றும் இடமாற்றம் விவரம்:

சென்னை போக்குவரத்துக் காவல் கூடுதல் ஆணையராக இருந்த பெரியய்யா, கோவை மாநகரக் காவல் ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

கோவை மாநகர ஆணையராக இருந்த அமல்ராஜ், திருச்சி காவல் ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

திருச்சி காவல் ஆணையராக இருந்த அருண், சென்னை போக்குவரத்துக் காவல் கூடுதல் ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

உணவு கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக இருந்த ஜி.வெங்கட்ராமன், சென்னை காவல் நிர்வாகப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சென்னை காவல் நிர்வாகப் பிரிவு கண்காணிப்பு ஆணையராக இருந்த தினகரன், சென்னை செயலாக்கம் பொறுப்புக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மத்திய அரசுப் பணியில் இருந்த சோனல்.வி.மிஸ்ரா காவலர் பயிற்சி கல்லூரி டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.

உத்தரப்பிரதேச எஸ்பியாக இருந்த அமானட்மன், சென்னை அமலாக்கப்பிரிவு கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

புதன் 15 நவ 2017