மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 நவ 2017

அஸ்வினைப் புகழ்ந்த சாஹா

அஸ்வினைப் புகழ்ந்த சாஹா

இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி தலா மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20 தொடர்களை விளையாட உள்ளது. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை (நவம்பர் 16) முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது.

இதற்காக இந்திய வீரர்கள் ஈடன் கார்டன் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பயிற்சிக்குப் பிறகு விக்கெட் கீப்பர் விர்த்திமான் சாஹா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அதில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெற்றியுடன் தொடங்குவதே எங்களது முதல் இலக்கு. அதன்பின்னர் தொடரையும் கைப்பற்ற முயற்சிப்போம் என்று தெரிவித்தார்.

மேலும் ஒவ்வொரும் டெஸ்ட்டும் முக்கியமானது. ஒவ்வொரு ஆட்டங்களும் பல்வேறு விதமான சவால்களைக் கொண்டிருக்கும். எனவே, அனைத்து சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் வகையில் தயார் நிலையில் இருப்போம். இலங்கை தொடரில் சிறப்பாக செயல்பட்டால் அடுத்து வரும் தென் ஆப்பிரிக்கா தொடரை நம்பிக்கையுடன் சந்திக்க இயலும் எனத் தெரிவித்தார்.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

புதன் 15 நவ 2017