மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 நவ 2017

வங்கிகளின் வாராக் கடன் பிரச்னை தீருமா?

வங்கிகளின் வாராக் கடன் பிரச்னை தீருமா?

வாராக் கடன் பிரச்னைகளில் சிக்கித்தவிக்கும் பொதுத்துறை வங்கிகள் அதற்கான தீர்வுகாணும் நோக்கில் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வங்கித்துறைக்கு மத்திய நிதியமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

ஜூன் மாத நிலவரப்படி, இந்தியப் பொதுத்துறை வங்கிகளுக்கு சுமார் ரூ.7.33 லட்சம் கோடி வாராக் கடன் உள்ளது. செயற்படாச் சொத்துகளின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுத்துறை வங்கிகளின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்குக் கடனுதவி வழங்குவதிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வங்கிகளின் வாராக் கடன் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் தேவையான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. அதன் ஒருகட்டமாக, இந்திய வங்கித்துறையின் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் கடந்த மாதம் மத்திய அரசு ரூ.2.11 லட்சம் கோடியை ஒதுக்கீடு செய்தது.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

புதன் 15 நவ 2017