மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 14 நவ 2017

அறம்: ரஜினி பாராட்டு!

அறம்: ரஜினி பாராட்டு!

நயன்தாரா நடிப்பில் வெளியாகியுள்ள அறம் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சனரீதியாகவும் வரவேற்பு பெற்றுள்ள நிலையில் படக் குழுவினருக்கு ரஜினி தனது பாராட்டைத் தெரிவித்துள்ளார்.

கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'அறம்'. நாட்டையே உலுக்கிக்கொண்டிருக்கும் தண்ணீர் பிரச்சினை, அதற்குப் பின்னால் உள்ள அரசியல், வளர்ச்சி பற்றி ஒரு பக்கம் பெருமையடித்துக்கொண்டிருக்கும் இந்தியா, மற்றொரு புறம் அடிப்படை உள்கட்டமைப்பிலேயே தோற்றுக்கொண்டிருக்கும் நிலை எனப் பல்வேறு அரசியல் விமர்சனங்களை படம் முழுக்க வைத்துள்ள இப்படம் மக்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.

திரையுலகைச் சேர்ந்த பலரும் தொடர்ந்து தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துவரும் நிலையில் படக் குழுவினர் ரஜினிக்கு 'அறம்' படத்தைப் பிரத்யேகமாகத் திரையிட்டுக் காண்பித்துள்ளனர். படத்தைப் பார்த்துவிட்டுப் படக் குழுவினரை வெகுவாகப் பாராட்டியுள்ளார் ரஜினி. முக்கியமான சமூகப் பிரச்சினையை அற்புதமாகக் கூறியிருப்பதாக படக் குழுவினரிடம் தெரிவித்திருக்கிறார்.

தொடர்ச்சியாக வசூலும் அதிகரித்துவருவதால் படக் குழு பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறது. கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

செவ்வாய் 14 நவ 2017