மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 14 நவ 2017

டாஸ்மாக்: அரசுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்!

டாஸ்மாக்: அரசுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்!

டாஸ்மாக் கடைகளைத் திறப்பது தொடர்பான வழக்கில், 'உயர் நீதிமன்றம் விளக்கம் கேட்டதென உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியுள்ளது தவறான ஒரு செயலாகும் என்று, உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளின் இருபுறங்களிலும் இருக்கும் மதுக்கடைகளை மூடவேண்டும் என்றுகூறி சமூக நீதி பேரவை தலைவர் க.பாலு தாக்கல் செய்த வழக்கில்,"இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளிலில் இருக்கும் மதுக்கடைகளையும் உடனே மூட வேண்டும்" என்று உச்ச நீதிமனறம் உத்தரவிட்டது. இதனையடுத்து கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி தமிழகத்திலுள்ள 5672 மதுக்கடைகளில் நெடுஞ்சாலைகளிலுள்ள 3321 மதுக்கடைகளை உடனடியாக மூடப்பட்டன.

இதைத் தொடர்ந்து தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை ஊரக சாலைகளாக மாற்றி 1000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதனை எதிர்த்து க.பாலு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மனுவில்," தேசிய நெடுஞ்சாலைகளில், மதுக்கடைகளை திறக்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், அதனை தமிழக அரசு தவறாக புரிந்துகொண்டுள்ளது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை விசாரித்த உயர் நீதிமன்றம் புதிய டாஸ்மாக்களைத் திறக்க தடை விதித்து உத்தரவிட்டது.

இதற்கிடையே தேசிய நெடுஞ்சாலைகளை, ஊரக சாலைகளாக மாற்றி மதுக்கடைகளை திறக்க உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட தமிழக அரசின் மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அதில்," சண்டிகருக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்பை சுட்டிக்காட்டி, இந்த உத்தரவே இந்தியா முழுவதும் பொருந்தும் என்று கூறி, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசுக்கு, உச்ச நீதிமன்றம் அனுமதியளித்தது. இந்த விசாரணையில் உயர் நீதிமன்றம் விளக்கம் கேட்டதன் பேரில்தான் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது என்று தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்ட்டது.

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

செவ்வாய் 14 நவ 2017