மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 14 நவ 2017

கோ ஆர்டினேட்டர் பழனிசாமி: அப்டேட்குமாரு

கோ ஆர்டினேட்டர் பழனிசாமி: அப்டேட்குமாரு

தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் இதுவரைக்கும் 500 பேருக்கும் மேல சுட்டுதள்ளிருக்காங்க. இங்க ஆட்சியில இருக்குறவங்க சென்ட்ரலுக்கு ஒரு லெட்டர் எழுதிட்டு, இறந்து போனவங்களுக்கு ஒரு இரங்கலை தெரிவிச்சுட்டு, ஒரு லட்சமோ ரெண்டு லட்சமோ நிதியை கொடுத்துட்டு தங்களோட கடமையை முடிச்சுக்குவாங்க. இப்ப பிரச்சினை உச்சத்துக்கு போய்கிட்டு இருக்கு. இந்திய கடற்படையே நம்ம மீனவர்களை சுடுறாங்க, இந்தியில பேச சொல்லி மிரட்டி இருக்காங்க. ஆந்திராவுக்கு மரம் வெட்ட கூலியா வந்தா தமிழர்களை சுட்டு தள்ளுவோம்னு ஆந்திர ஐ.ஜி பிரஸ் மீட் கொடுக்குறாரு. மீன் பிடிச்சா, மரம் வெட்டுனா, இந்தி பேசலனா சுடுறவங்க நாளைக்கு தமிழன்னு சொன்னாலே சுட்டுதள்ளுவோம்னு சொன்னாலும் ஆச்சரியப்படுறதுக்கு இல்ல. இருக்குற அட்டூழியத்தை எல்லாம் பண்ணிட்டு தமிழர்கள் பிரிவினைவாதிகள்னு பேசுறதுக்கு இங்கயே நாலு பேரை செட் பண்னி வச்சுருக்காங்க. தமிழ்நாட்டுகாரன்லாம் உசுர கையில பிடிச்சுகிட்டு இருக்குறாங்க, பழனிசாமி ஒரு கண்டனம் கூட தெரிவிக்காம எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுல பிஸியா இருக்காரு. அவரை தமிழ்நாட்டுக்கு முதலமைச்சரா போட்ருக்காங்களா இல்லை நூற்றாண்டு விழாவுக்கு கோ - ஆடினேட்டரா போட்ருக்காங்களா?

@Anbe Selva

தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டது பற்றி கமல் ஏதாவது டிவீட்டியிருக்காரா?

இல்ல டிசம்பர் கச்சேரி மாதிரி இந்திய ராணுவம் சுடுவதும் தமிழனுக்கு பெருமைன்னு ஏதாவது ஒளறி கொட்டியிருக்காரா?..

@Pon Mathivanan

அந்நிய நாடு எல்லை மீறினால்

அந்நாட்டு துதரகத்திடம் முறையிடலாம்

தற்போது நாம் எங்கு முறையிடுவது...??

@HAJAMYDEENNKS

இந்தியில் பேச சொல்லி இந்திய கடற்படையினர் அடித்தனர் - மீனவர்கள் #

மோடியே இங்கே வந்தால் தமிழில்தான் பேசுறாரு நாங்க ஏன் இந்தியில பேசணும்!

@MadrasCentraI

இந்தியில் பேசக் கூறி தமிழக மீனவர்கள் மீது இந்தியக் கடலோரக்காவல் படை தாக்குதல்.

சுடச்சொன்னதே அவரு தான்டா..

@senthilcp

அதிமுகவை அக்கட்சியினரே அழித்துவிடுவார்கள்: பொன். ராதா # அதிமுகவை அழித்தால் பிடிக்குமா?அதிமுகவை மோடியிடம் அளித்தால் பிடிக்குமா?

@SKtwtz

கால காலத்துல கல்யாணம் ஆகிருந்தா இந்நேரம் என்னோட குழந்தையோட குழந்தைகள் தினம் கொண்டாடி இருந்திருப்பேன்...

இன்னும் எத்தனை நாளைக்கு தான் நானும் குழந்தைன்னு சொல்லி மனச தேத்திட்டு இருப்பேனோ..

@HAJAMYDEENNKS

ரயிலில் ஸ்னேகம் பிடிக்கலாம்..பஸ்ஸில் ஸ்னேகம் பிடிக்கலாம்..விமானத்தில் மட்டும் முடியாது.. ஏறுனதிலிருந்து இறங்குவது வரை உர்ருன்னே வராங்க...!

@senthilcp

எனது மனைவியின் நகை தொடர்பாக உரிய கணக்குகளை இரண்டு நாட்களில் அளிப்பேன் - விவேக் # நகைக்கும்படி இருந்திடாம இருக்கனும்

@Prabakar Kappikulam

பீனிக்ஸ் மாலில் வருமான வரித்துறை சோதனை நிறைவு

ஜாஸ் சினிமாஸ் படக்காட்சிகள் தொடக்கம்

முதல் காட்சியில் #அறம்

அப்போ அடுத்த காட்சி..?

திருட்டுப்பயலே

@senthilcp

இரட்டை இலை சின்னத்தை முடக்க நினைத்தவர்கள் அழிந்து போவார்கள்..-ஓபிஎஸ்.# ஏன்"தனக்குத்தானே சாபம் குடுத்துக்கறாரு?

@Kozhiyaar

புரிந்து கொள்ளாததால் சிலரையும், நன்றாய் புரிந்து கொண்டதால் சிலரையும் பிரிய நேரிடுகிறது!!!

@saravananucfc

நான் நினைத்தால் இரண்டே நாளில் தினகரனை முடித்து விடுவேன்

-ஜெயகுமார்

ஆனா நினைக்க மாட்டேன், நினைக்க தெரியாது எனக்கு மொமன்ட்

@வாசுகி பாஸ்கர்

நயன்தாராவை தோழர் என்று அழைப்பதில் எந்த பிரச்னையும் இல்லை, இனி தோழர்களை எப்படி அழைப்பது என்பது தான் குழப்பமாக இருக்கிறது - மனுஷ்ய புத்திரன்

கட்சிக்காரங்களை உடன் பிறப்பேன்னு அழைச்சிட்டு, கூட பொறந்தவங்களை எப்படி அழைக்கிறீங்களோ அப்படி அழைக்கலாம்.

@maduraijinna*

சசிகலா உறவினர் விவேக் பெயரில்

பலகோடி சொத்துக்கள்-செய்தி

சசிகலா கிட்ட ஆட்சி இருந்திருந்தா., "இளம் வயது தொழிலதிபர்"னு போட்டிருப்பாங்க இந்த ஊடகங்கள்.!

@CreativeTwitz

அஇஅதிமுக என்ற எஃக்கு கோட்டையின் ஒரு செங்கலை கூட யாராலும் உருவ முடியாது - பன்னீர் செல்வம்

எஃக்குனா? முட்டைன்னு நினச்சு மோடி ஆம்ப்ளேட் போட்டு சாப்பிட்டுட்டு இருக்காரு

@mujib

மொபைலில் இந்த நம்பர் யாரோடதாக இருக்கும் அந்த நம்பர் யாரோடதாக இருக்கும்

என்கிற சந்தேகம் வராத வரையில் கணவன் மனைவிக்குள் சந்தோஷம் நிலைத்திருக்கும்...

@SKtwtz

என்னடா வாழ்க்கை சோகமா இருக்கேன்னு அழுதுட்டு இருந்தேன்..

அந்த ஆண்ட்டி வந்து வுட்வர்ட்ஸ் கிரைப் வாட்டர் கொடுத்துட்டு போறாங்க... நாம தான் குழந்தை ஆச்சே...

@Prabakar Kappikulam

இரட்டை இலைச் சின்னம் இன்னும் ஒரு வாரத்தில் கிடைக்கும்

- எடப்பாடி பழனிச்சாமி அணி எம்பி வைத்தியலிங்கம் பேட்டி

தேர்தல் ஆணையத்துல வழக்குப் போடுறதும், அமேசான் ஆப்ல ஆர்டர் பண்றதும் ஒன்னுதான் போல….

@Kannan_Twitz

எல்லாவற்றையுமே அட்ஜெஸ்ட் செய்துக் கொள்ளாதீர்கள்!

அட்ஜெஸ்ட் மலிவாகிவிடும்..

மலிவாக கிடைக்கும் எதற்கும் மதிப்பில்லை...

@ajmalnks

இந்தியாவில் அனைத்தும் உலகத்தரத்துக்கு மாற்றப்படுகிறது-மோடி

ஃபோட்டோஷாப் அதானே எல்லாம்

@Saravanan Chandran

குழந்தைகள் தின நாளன்று அப்லோடு பண்ணுவதற்கு ஒரு சின்ன வயது போட்டோ கூட இல்லை. போட்டோ எடுத்தா ஆயுசு குறைஞ்சிடும்ங்கற ஆச்சியின் அட்ராசிட்டிதான் அதற்குக் காரணம். கையில் கிடைத்தால், அம்மிணியை சட்டினியாக்கி விடுவேன்.

@Prabakar Kappikulam

மீன்பிடிக்கும் தொழிலை விட்டு விட்டு

மணல் கொள்ளையும், மதுபானக் கடையும் நடத்தினால்

ஆளும் அரசுகளும் பாதுகாப்பு கொடுக்கும்.

@வாசுகி பாஸ்கர்

கணினி படிச்சவனுக்கு மாடு எத்தனை லிட்டர் கறக்குது, எவ்ளோ பால்கோவா க்கு போகுது, எவ்ளோ வெண்ணைக்கு போகுது, எவ்ளோ ஏற்றுமதிக்கு போகுது ன்னு கணக்கீடு, நான் வேலை கொடுக்கிறேன் - சீமான்

data entry வேலைக்கும், ஐடி வேலைக்கும் வித்தியாசம் தெரியாம எங்கண்ணன் இப்படி என்னத்தையாவது ஒளறிட்டு இருக்காரே

கருப்பு கருணா

பிலிப்பைன்ஸ்க்கு போயி மண்ணை தோண்டுனாராம் நம்ம பிரதமர். உள்ளூர்ல வெவசாயி கோவணத்தோட நின்னப்போ எதை தோண்டிக்கிட்டிருந்தாருன்னு கேட்டால்...நம்மள ஆண்ட்டி இண்டியன்பாங்க. நமக்கேன் வம்பு..!

மொதல்ல உள்ளூர்ல ஓணான் புடிங்க சார்.அப்புறமா அசலூர்ல ஆன புடிக்கலாம்..!

-லாக் ஆஃப்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

செவ்வாய் 14 நவ 2017