மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 14 நவ 2017

மீனவர்கள் மீது தாக்குதல்: நீதிமன்றத்தில் முறையீடு!

மீனவர்கள் மீது தாக்குதல்: நீதிமன்றத்தில் முறையீடு!

மீனவர்களை இந்தியக் கடற்படையினர் தாக்கிய விவகாரத்தில் மனு தாக்கல் செய்தால் வரும் 17ஆம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடலுக்குள் மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வர மீனவர்கள் மீது நேற்று (நவம்பர் 13) கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான ராணி அபாக்கா என்ற கப்பலில் வந்த இந்திய கடலோரக் காவல் படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் பிச்சை என்ற மீனவர் மீது ரப்பர் குண்டு பாய்ந்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

மீனவர்களைப் பிடித்து வைத்துக்கொண்டு விசாரணை என்ற பெயரில் தலைகீழாய் நிற்கச் சொல்லியும், ஹிந்தியில் பேசச் சொல்லியும் கொடுமைப்படுத்தியதாகக் கரைக்குத் திரும்பிய மீனவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் மீனவர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று மீனவர் நலச் சங்கத்தின் எல்.டி.ஏ.பீட்டர் ராயன் சார்பில் வழக்கறிஞர் மவுரியா தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வு முன்பு ஆஜராகி முறையிட்டார்.

இதை விசாரித்த நீதிமன்றம், இது தொடர்பாக மனு தாக்கல் செய்தால் வரும் 17ஆம் தேதி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

இதற்கிடையே தாக்குதல் நடத்திய வீரர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கடலோரக் காவல் படை குழுமத்தின் கூடுதல் டிஜிபி வன்னிய பெருமாள் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால் கடலோரக் காவல் படையின் சென்னை தலைமையகத்திலிருந்து இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் பாக் வளைகுடாவில் தாங்கள் எவ்வித துப்பாக்கிச் சூடும் நடத்தவில்லை எனக் காவல் படையினர் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

செவ்வாய் 14 நவ 2017