மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 14 நவ 2017

இந்தியா – அமெரிக்கா: மிகப்பெரிய ராணுவ சக்திகள்!

இந்தியா – அமெரிக்கா: மிகப்பெரிய ராணுவ சக்திகள்!

தென்கிழக்கு ஆசிய நாடுகளை ஒருங்கிணைக்கும் ஏசியான் அமைப்பின் 3 நாள் மாநாடு, பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவில் நேற்று தொடங்கியது. இதில் கலந்துகொண்ட அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோடியைத் தனியாகச் சந்தித்து சில நிமிடங்கள் உரையாடினர். அப்போது, ‘இந்தியாவும் அமெரிக்காவும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக சக்திகள் மட்டுமல்ல, உலகின் மிகப்பெரிய ராணுவ சக்தியும்கூட’ என்று தெரிவித்தனர்.

மோடி – ட்ரம்ப் சந்திப்பின்போது, இருநாடுகளுக்கு இடையேயான கூட்டுறவு, சர்வதேச அரசியல், பொருளாதார வளர்ச்சி மற்றும் ஒருங்கிணைந்த ராணுவ நடவடிக்கைகள் குறித்து பேசியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து வாஷிங்டன் தலைமையகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே விரிவான திறன்மிக்க நட்புறவு உருவாவது பற்றியும், இந்திய பசிபிக் பிராந்தியத்தில் சுமூகமான சூழல் நிலவுவது பற்றியும் இருவரும் விவாதித்தனர். உலகின் இரண்டு ஜனநாயக சக்திகள் மிகப்பெரிய ராணுவ சக்திகளாகவும் விளங்குவதற்கு, ராணுவ கூட்டாளிகளாக இருப்பதற்கு பரஸ்பரம் உறுதி தெரிவித்துக்கொண்டனர்” என்று கூறப்பட்டுள்ளது.

சமீபகாலமாக அமெரிக்காவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெயின் அளவு 1 கோடி பேரலைத் தாண்டியுள்ளது. அரபுநாடுகளை மட்டுமே சார்ந்திருப்பதிலிருந்து விலகும்வகையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த நடவடிக்கை மகிழ்ச்சியளிப்பதாகவும் இதில் கூறப்பட்டுள்ளது.

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

செவ்வாய் 14 நவ 2017