மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 14 நவ 2017

பேரறிவாளன் ஆயுள் தண்டனையை நிறுத்திவைக்கக் கோரி வழக்கு!

பேரறிவாளன் ஆயுள் தண்டனையை நிறுத்திவைக்கக் கோரி வழக்கு!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனையை நிறுத்திவைக்கக் கோரிய பேரறிவாளன் மனுவுக்கு மத்திய அரசு இரண்டு வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜீவ் கொலை வழக்கில் பெல்ட் வெடிகுண்டு மற்றும் கொலை சதி தொடர்பாக விசாரிக்கப் பல்நோக்கு கண்காணிப்புக் குழு (எம்டிஎம்ஏ) அமைக்கப்பட்டது. இந்தக் குழு கடந்த மாதம் அறிக்கை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் ராஜீவ் கொலை குறித்து எந்த விவரங்களும் குறிப்பிடவில்லை. அந்த அறிக்கையின் நகலை எங்களுக்கும் வழங்க உத்தரவிட வேண்டும் என்று பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று (நவம்பர் 14) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்குமாறு பேரறிவாளன் சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.

பேட்டரி வாங்கிக் கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுத் தனக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டது என்றும், வெடிகுண்டில் வைக்கப்பட்ட பேட்டரி நான் வாங்கிக் கொடுத்ததுதான் என்று நிரூபிக்கப்படவில்லை என்றும் அம்மனுவில் பேரறிவாளன் குறிப்பிட்டிருக்கிறார். எனினும் 26 ஆண்டுகளாகச் சிறையில் இருப்பதாகவும், எனவே, தனது தண்டனையை நிறுத்தி வைக்கும்படியும் கூறியுள்ளார். பெல்ட் குண்டு தயாரித்ததாகக் கூறப்படுபவர் இன்றும் இலங்கையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஏற்ற உச்ச நீதிமன்றம் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை விடுவிக்க மத்திய அரசு விரும்புகிறதா என்பது குறித்து இரு வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

செவ்வாய் 14 நவ 2017