மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 14 நவ 2017

யானை மீது ஏற முயற்சி: தூக்கி வீசப்பட்ட விபரீதம்!

யானை மீது ஏற முயற்சி: தூக்கி வீசப்பட்ட விபரீதம்!

யானை மீது ஏறி உட்கார முயற்சி செய்த இளைஞர் ஒருவர் தூக்கி வீசப்பட்ட வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.

கேரளாவில் உள்ள தொடுப்புழா கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தன் நண்பர்களுடன் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பெர்மிஷேசரி காட்டுப் பகுதிக்குச் சென்றுள்ளார். அங்கு மது அருந்திவிட்டு வந்துகொண்டிருந்த இளைஞர்கள் தனியாக நடமாடிய யானை ஒன்றைக் கண்டுள்ளனர். அப்போது ஒரு இளைஞர், பாகுபலி படத்தில் பிரபாஸ் யானையின் தும்பிக்கையில் ஏறி நிற்பது போன்று தானும் செய்ய முயன்றார். யானைக்குப் பழங்கள் கொடுத்துவிட்டு அதன் தந்தத்தைப் பிடித்து ஏற முயற்சித்தார். இந்தக் காட்சியை வீடியோவாக தனது நண்பரிடம் பதிவு செய்யச் சொன்ன அவர் அதனை ஃபேஸ்புக்கில் நேரடியாக ஒளிபரப்பு செய்யத் திட்டமிட்டனர்.

பின்பு அந்த இளைஞர் யானையின் தந்தங்களைப் பிடித்து முத்தம் கொடுத்தபோது, ஆத்திரமடைந்த யானை, இளைஞரை வேகமாகத் தூக்கி எறிந்தது. யானை தூக்கி வீசியதால் தலைகுப்புற விழுந்த இளைஞரை, நண்பர்கள் மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர். இந்தக் காட்சி ஃபேஸ்புக் லைவில் ஓடியுள்ளது.

தற்போது அந்த இளைஞர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார். திரைப்படங்களில் ஒரு காட்சியை எடுப்பதற்கு முன்பு நடிகர்களுக்கு முறையான பயிற்சி வழங்கப்படும். ஒத்திகை பார்க்கப்படும். ஸ்டண்ட் கலைஞர்களின் ஒத்துழைப்பு இருக்கும். பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலமாக இருக்கும். விலங்குகள் சம்பந்தப்பட்ட காட்சிகளில் பழக்கப்பட்ட விலங்குகளை வைத்துப் படமாக்கப்படும். அவற்றில் தேவைப்பட்டால் கிராஃபிக்ஸின் துணையும் இருக்கும் இதையெல்லாம் யோசிக்காமல் திரையில் காண்பதை அப்படியே எடுத்துக்கொண்டு சாகசங்களில் ஈடுபட்டால் விபரீதம்தான் என்பதற்கு உதாரணம் இந்த வீடியோ காட்சி.

வீடியோ

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

செவ்வாய் 14 நவ 2017