மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 14 நவ 2017

அரசு மரியாதையுடன் தந்தைக்கு இறுதிச் சடங்கு!

அரசு மரியாதையுடன் தந்தைக்கு இறுதிச் சடங்கு!

கேரளாவில் தந்தையின் விருப்பப்படி அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கை மகனே நடத்திய சம்பவம் அந்தப் பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் வில்லாடம் பகுதியைச் சேர்ந்தவர் முகுந்தன். இவர் திருச்சூர் நகரக் காவலர்கள் பயிற்சிப் பள்ளியின் தலைவராக இருந்தார். இவர் தலைமையில்தான் கேரளாவில் இருக்கும் முக்கியப் பிரமுகர்கள், அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படும். இவரது மகன் மோகன்குமாரும் இதே துறையில் பணிக்குச் சேர்ந்தார்.

1997ஆம் ஆண்டு முகுந்தன் பணி ஓய்வு பெற்றார். அவர் ஓய்வு பெற்ற பல ஆண்டுகளுக்குப் பின்னர் அதே காவலர்கள் துறைக்கு அவரது மகன் தலைவரானார்.

இவரது தலைமையில் தான் கேரள முன்னாள் முதலமைச்சர் கருணாகரனின் உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்பட்டது. மகன் நடத்திய அரசு மரியாதைக் காட்சிகளை தந்தை டிவியில் பார்த்து வியப்படைவார்.

பல முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட்சி தலைவர்களின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தியுள்ளேன். தனக்கும் அதேபோன்று உன்னுடைய கையால் அரசு மரியாதை வேண்டும் என்று மகனிடம் தன் ஆசையைத் தெரிவித்தார்.

இதைக் கேட்ட மோகன் குமார் அதிர்ச்சியடைந்தார். இந்தத் துறையில் முன்னாள் தலைவராக இருந்த தனது தந்தைக்கு எப்படி அரசு மரியாதை கிடைக்கும்? கிடைக்காது என்று தந்தைக்கே தெரியும். இருந்தாலும் அவர் ஏன் இப்படிக் கேட்கிறார். என்று என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தார்.

உடல்நலக்குறைவால் முகுந்தன் நேற்று (நவம்பர் 13) இரவு இறந்தார். தந்தையின் இறுதி ஆசையை நிறைவேற்றக் கேரள உயர் காவல் அதிகாரிகளிடம் அரசு மரியாதையுடன் தனது தந்தையின் இறுதிச் சடங்கு நடத்த அனுமதி கேட்டார். இதுபோன்ற நிகழ்வு கேரள வரலாற்றிலேயே கிடையாது. எப்படி அனுமதிக்க முடியும் என்று உயர் காவல் அதிகாரிகள் மறுத்தனர்.

எனினும், தந்தையும் மற்றும் மகனும் நேர்மையாகவும், அர்ப்பணிப்புடனும் வேலை செய்ததைக் கணக்கில் எடுத்துக்கொண்ட மேலிடம் இதற்கு ஒப்புக்கொண்டது. முகுந்தனின் உடலுக்கு அரசு மரியாதை வழங்க உயர் காவல் அதிகாரிகள் சம்மதித்தனர். அதற்கான ஆணையை மோகன்குமாரிடம் வழங்கினர்.

மகிழ்ச்சியுடன் ஆணையைப் பெற்ற மோகன்குமார் திருச்சூர் பயிற்சிப் பள்ளியில் உள்ள காவலர்களை அழைத்துக்கொண்டு வீட்டிற்குச் சென்றார். அங்கு தந்தையின் உடலுக்கு அரசு மரியாதையை மகனே செலுத்தினார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் ஆச்சரியத்தையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

செவ்வாய் 14 நவ 2017