மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 14 நவ 2017

சென்னை: ஏரிகளின் நீர்மட்டம் உயர்வு!

சென்னை: ஏரிகளின் நீர்மட்டம் உயர்வு!

தமிழகத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாகச் சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகளான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், ஏரிகளில் நீர்வரத்து சுமார் 40 சதவிகிதக் கொள்ளளவை எட்டியுள்ளது.

கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் இந்த நான்கு ஏரிகளும் வறண்டு காணப்பட்டன. தற்போது பெய்துவரும் மழையால் ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்துவருகிறது.

சோழவரம் ஏரி:

சோழவரம் ஏரியில் 75 சதவீதம் நீர் நிரம்பி விட்டது. ஏரியின் மொத்தக் கொள்ளளவு 881 மில்லியன் கன அடி. தற்போது ஏரியில் 587 மி.கன அடி நீர் உள்ளது. இந்த ஏரிக்கு 162 கனஅடி தண்ணீர் வருகிறது. நீர் வெளியேற்றம் இல்லை.

பூண்டி ஏரி:

பூண்டி ஏரியின் மொத்தக் கொள்ளளவு 3231 மில்லியன் கன அடி. தற்போது ஏரியில் 924 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது. 196 கன அடி தண்ணீர் வருகிறது. 16 கன அடி வெளியேற்றப்படுகிறது.

புழல் ஏரி:

புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 கன அடி. ஏரியில் 1410 மி.கன அடி நீர் உள்ளது. ஏரிக்கு 801 கன அடி வருகிறது. 84 கன அடி வெளியேற்றப்படுகிறது.

செம்பரம்பாக்கம் ஏரி:

செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்தக் கொள்ளளவு 3645 மி.கனஅடி ஏரியில் தற்போது 1388 மி.கன அடி தண்ணீர் உள்ளது. 256 கன அடி நீர் ஏரிக்கு வருகிறது. 48 கன அடி வெளியேற்றப்படுகிறது.

தொடர்ந்து மழை நீடித்தால் ஏரிகளின் நீர்மட்டம் அதிரடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் மொத்தம் 924 ஏரிகள் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதில் பிள்ளைப்பாக்கம், மணிமங்கலம், மானாம்பதி, தையூர், சிறுதாவூர், மதுராந்தகம் ஏரிகள் உள்பட மொத்தம் 265 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி விட்டன. 261 ஏரிகள் 75 சதவீதமும், 248 ஏரிகள் 50 சதவீதமும், 150 ஏரிகள் 50 சதவீதத்துக்குக் கீழும் நிரம்பியிருக்கிறது.

தொடர்ந்து மழை பெய்துவருவதால் ஏரிகளின் நீர் மட்டத்தைப் பொதுப்பணித் துறை அதிகாரிகள் கண்காணித்துவருகிறார்கள்.

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

செவ்வாய் 14 நவ 2017