மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 14 நவ 2017

தென்கிழக்கு நாடுகளுக்கு மோடி அழைப்பு!

தென்கிழக்கு நாடுகளுக்கு மோடி அழைப்பு!

இந்தியாவில் முதலீடு செய்ய தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பிற்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு (ASEAN) மாநாடு பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரான மணிலாவில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, "தொழில் துறையில் இந்தியா தற்போது அபரிவிதமான வளர்ச்சியை நோக்கிப் பயணித்து வருகிறது. இதற்கான முயற்சியில் நாங்கள் இரவு பகலாக உழைத்து வருகிறோம். இந்தியாவை உலக உற்பத்தி மையமாக மாற்றி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அளிப்பதே எங்களது அரசின் நோக்கமாகும். கடந்த மூன்று ஆண்டுகளில் அந்நிய நாடுகள் முதலீடு செய்யும் முறையை எளிதாக்கி, காலாவதியான 1200க்கும் மேற்பட்ட சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் பெரும்பாலானோரிடம் வங்கிக் கணக்கே இல்லை என்ற நிலை, ’ஜன் தன் யோஜனா’ திட்டம் வந்த பிறகு முற்றிலும் மாறிவிட்டது. இந்தியாவில் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் முதலீட்டால் அந்நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் மேம்படும். இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மக்கள் தொகை 185 கோடியாகும். இது உலக மக்கள் தொகையில் நான்கில் ஒரு பகுதியாகும். இவை இணைந்து செயல்படுவதன் மூலம் உள்நாட்டு உற்பத்தி 3.8 லட்சம் கோடி டாலர்களாக உயரும்” என்று தெரிவித்துள்ளார்.

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

செவ்வாய் 14 நவ 2017