மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 14 நவ 2017

ஹாக்கி வீராங்கனையாக தப்ஸி

ஹாக்கி வீராங்கனையாக தப்ஸி

இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் சிங்கின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கும் திரைப்படத்தில் நடிக்கிறார் நடிகை தப்ஸி பன்னு.

இயக்குநர் ஷாத் அலி இயக்கும் இந்த திரைப்படம் குறித்து தப்ஸி இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அளித்துள்ள பேட்டியில், “விளையாட்டு என் வாழ்க்கையின் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. எனக்கு விளையாட்டு என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் இந்த படத்தில் நானும் பணியாற்ற வேண்டும் என்று எண்ணினேன். தற்போது எனக்கு அதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும் பஞ்சாபில் எனக்கு மிகவும் பிடித்த இடங்களில் நாங்கள் படப்பிடிப்பு நடத்தி வருகிறோம். ஹாக்கி சம்பந்தப்பட்ட சில காட்சிகள் முடிவடைந்தன இன்னும் பல காட்சிகள் எடுக்கப்படவுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

தில்ஜீத் தோஷஞ்ச் மற்றும் ஆங்கட் பேடி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இதில் தில்ஜீத் மற்றும் தப்ஸி ஹாக்கி வீரர்களாக மட்டுமல்லாமல் காதல்காட்சிகளிலும் நடித்துள்ளனர். இப்படம் அடுத்த வருடம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

செவ்வாய் 14 நவ 2017