மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 14 நவ 2017

நான் நட்சத்திரம் அல்ல நடிகை: நேகா ஷர்மா

நான் நட்சத்திரம் அல்ல நடிகை: நேகா ஷர்மா

சோலோ படத்தின் மூலம் தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் அறிமுகமான பாலிவுட் நடிகை நேகா ஷர்மா அப்படத்தில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார். சோலோ பற்றிய அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டுள்ள அவர் நான் நடிகையாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறேனே ஒழிய நட்சத்திரமாக வலம் வர விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.

2007ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான சிருதா படத்தின் மூலம் தனது நடிப்பு பயணத்தை தொடங்கிய அவர் அதன் பின் 2009ல் குரடு என்ற தெலுங்கு படத்தில் நடித்தார். அதன் பின் முழுக்க இந்தி திரையுலகில் நடித்து வந்த அவர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவான சோலோ படம் மூலம் தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். பிஜாய் நம்பியார் இயக்கிய இத்திரைப்படம் ஆந்தாலஜி வகையைச் சேர்ந்தது. நான்கு குறும்படங்களின் தொகுப்பான இப்படத்தில் நேகா ஷர்மா ஒரு குறும்படத்தில் நடித்திருந்தார். டெக்கான் கிரானிக்கலுக்கு அளித்த பேட்டியில் படம் குறித்த தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார் நேகா ஷர்மா.

நான்கு கதாநாயகிகளில் ஒரு கதாநாயகியாக நடித்தது உங்களுக்குத் தமிழில் சிறந்த அறிமுகத்தைக் கொடுத்துள்ளதாக நினைக்கிறீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த நேகா, “நான் தனித்துத் தெரியவேண்டும் என நினைக்கவில்லை. சினிமா மேல் உள்ள விருப்பமே நான் இங்கே இருப்பதற்கான காரணம். நான் ஒரு நட்சத்திரமாக வலம் வர விரும்பவில்லை. நடிகையாகவே இருக்க விரும்புகிறேன். நான் நிறைய கமர்ஷியல் படங்களில், பெரிய பட்ஜட் படங்களில் நடித்துள்ளேன். எனது முகம் அந்த மாதிரியான கதாபாத்திரங்களுக்கு ஒத்துப்போவதாக நினைக்கிறேன். நான்கு கதாநாயகிகள் அல்ல, 20 கதாநாயகிகள் நடித்தாலும் நான் சேர்ந்து நடிப்பேன். நான் ஏன் இந்த படங்களில் நடிக்கிறேன் என்பதற்கான பதில் எனக்கு தெரியும். கதையே இதை முடிவுசெய்கிறது. எனது நடிப்பு நிச்சயம் பேசப்படும் என நம்புகிறேன்” என்றார்.

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

செவ்வாய் 14 நவ 2017