மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 14 நவ 2017

இனி மாட்டுத்தாவணின்னு பஸ் வராது!

இனி மாட்டுத்தாவணின்னு பஸ் வராது!

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், 'எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம்' எனப் பெயர் மாற்றப்பட்டாலும் பேருந்துகளில் தொடர்ந்து குழப்பம் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

மதுரையின் ஒருங்கிணைந்த பேருந்து நிலையமான மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், தமிழக முதல்வரின் அறிவிப்பிற்குப் பின், கடந்த அக்டோபர் மாதம் 31ஆம் தேதி எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இந்நிலையில், தற்போது மதுரை நகர்ப்புற மற்றும் புறநகர்ப்புற பேருந்துகள் சிலவற்றில் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் என டிஜிட்டல் பெயர்ப் பலகை மாற்றப்பட்டுள்ளது. இருந்தபோதும், அனைத்துப் பேருந்துகளுக்கும் பெயர் மாற்றத்தை உடனடியாக அமல்படுத்தாத காரணத்தால், இப்போதும் பழைய பெயரான மாட்டுத்தாவணி என்ற பெயரே பல்வேறு பேருந்துகளில் தெரிகிறது.

இதனால் பல்வேறு இடங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு இரண்டும் வேவ்வெறு பேருந்து நிலையங்களோ என்ற குழப்பம் ஏற்படுகிறது. இது தொடர்பாக அங்குள்ள அதிகாரிகள் சிலர் கூறுகையில், "பெயர் மாற்றத்தை இரண்டு நாட்களுக்கு முன்பாகத்தான் தொடங்கினோம். ஒரு சில நாள்களுக்குள் அனைத்துப் பேருந்துகளுக்கும் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் என மாற்றிவிடுவோம் இனி மாட்டுத்தாவணி என்ற பெயரில் எந்தப் பேருந்தும் வராது” என்று அவர் தெரிவித்தார்.

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

செவ்வாய் 14 நவ 2017