மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 14 நவ 2017

ஏ.டி.பி. டூர்: வெளியேறிய நடால்

ஏ.டி.பி. டூர்: வெளியேறிய நடால்

ஏ.டி.பி. டூர் லீக் போட்டியில் தோல்விபெற்ற ரஃபேல் நடால், காயம் காரணமாக இந்தத் தொடரிலிருந்து வெளியேறினார்.

உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த டென்னிஸ் வீரர்களுக்கு வருடம் முழுவதும் பல்வேறு இடங்களில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. அதில் அவர்கள் பெரும் வெற்றிகளின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்பட்டு தரவரிசை படுத்தப்படுவர். வருடத்தின் இறுதியில் தரவரிசையில் முதல் 8 இடங்களைப் பெற்ற வீரர்களுக்கு ஏ.டி.பி. டூரின் பைனல் நடத்தப்படும்.

அதன்படி இந்த வருடத்திற்கான ஏ.டி.பி. டூர் பைனல் நவம்பர் 11ஆம் தேதி லண்டனில் தொடங்கியது. 8 வீரர்கள் இரண்டு அணிகளாகப் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதில் ஒரு பிரிவில் உள்ள ஒருவர் மற்ற மூன்று பேருடன் தலா ஒருமுறை மோத வேண்டும்.

முதல் போட்டியில் உலகின் இரண்டாம் நிலை வீரரான ரோஜர் ஃபெடரர் ஒன்பதாம் நிலை வீரரான ஜேக் சாக்குடன் மோதினார். இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய பெடரர் 6-4, 7-6 என்ற நேர் செட்களில் ஜேக் சாக்கை வீழ்த்தினார். மற்றொரு லீக் போட்டியில் நான்காம் நிலை வீரரான டொமினிக் தியம், ஆறாம் நிலை வீரரான கிரிகொர் டிமித்ரோவை எதிர்கொண்டார். இப்போட்டியில், 6-3, 5-7, 7-5 என்ற செட்கணக்கில் டிமித்ரோ வெற்றி பெற்றார்.

முதல் நிலை வீரரான நடால் நேற்று (நவம்பர் 13) நடைபெற்ற லீக் போட்டியில் உலகின் எட்டாம் நிலை வீரரான டேவிட் கோஃப்பின் உடன் மோதினார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் போட்டியில் முதல் செட்டினை 6-7 என்ற புள்ளிக் கணக்கில் நடால் இழந்ததும் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின்னர் இரண்டாவது செட்டினை நடால் 7-6 என்ற புள்ளிகளில் போராடிக் கைப்பற்றினார். வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது செட்டில் டேவிட் கோஃப்பின் 6-4 என்ற புள்ளிக் கணக்கில் எளிமையாக கைப்பற்றி போட்டியில் வெற்றி பெற்றார். சுமார் 2 மணிநேரம் 30 நிமிடங்கள் இந்த போட்டி நடைபெற்றது.

போட்டி முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடால் “நான் முடிந்த வரை சிறப்பாக விளையாட முயற்சி செய்தேன். ஆனால் எனது முழங்காலில் ஏற்பட்ட காயத்தினால் என்னால் சரிவர விளையாட முடியவில்லை. இந்த தொடரை மட்டும்தான் நான் என் வாழ்நாளில் அதிகமுறை தவறவிட்டுள்ளேன். நான் தோல்வியடைந்து விட்டேன். இருப்பினும் நான் அழப்போவதில்லை. ஏனெனில் இந்த சீசனில் பல்வேறு வெற்றிகளைப் பெற்றுள்ளேன்” எனத் தெரிவித்தார்.

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

செவ்வாய் 14 நவ 2017