மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 14 நவ 2017

பியூட்டி ப்ரியா - குழந்தை என்றாலே அழகுதான்!

பியூட்டி ப்ரியா - குழந்தை என்றாலே அழகுதான்!

குழந்தை நன்றாகச் சிவப்பாக பிறக்க என்னன்னவோ க்ரீம்களையும் உணவுகளையும் தாய்மார்கள் செய்துகொண்டும், பிறந்த குழந்தைக்கு என்னன்னவோ செய்து சிவப்பாக்க வேண்டும் என்று முயற்சித்தும் பல மாயைகளில் சிக்கியுள்ளனர் இக்கால சமூகத்தினர். சிவப்பாக இருந்தால்தான் அழகு என்றும் மதிப்பார்கள் என்றதுமான போலி கெளரவங்கள், எண்ணங்கள் குழந்தைகளையும் பாதித்து வருகிறது.

பிறந்த குழந்தைகள் பிங்க், ரோஸ், வெள்ளை, சிவப்பு இப்படி எல்லா வண்ணமும் கலந்த ஒருவித கலவைக் கலரில் இருப்பதுதான் இயல்பானது. குழந்தையின் மேல் தோல் சரியாக வளர்ச்சியடையாமல் மெல்லியதாக இருக்கும்போது, உட்புற ரத்த ஓட்டத்தினால், தோலின் வண்ணம் ஒருவித சிவப்பாக இருக்கும். பிறந்த சில நாள்கள் அல்லது வாரங்களில் இந்த வண்ணம் மாறத் தொடங்கி, தோலின் உண்மை நிறம் வெளிப்படும். (நான்கூட பிறக்கும்போது "நல்ல பிங்க்" கலரில் இருந்தேனாம். ஒரு வாரம் கழித்துதான் குடும்பமே ஏமாந்திருக்கின்றது. :-))

குழந்தை பிறந்த இரண்டு மூன்று நாள்களில், உடலில் இருக்கும் நீர் குறையத் தொடங்கியதும் குழந்தையின் எடையும் சற்று குறையும். அப்போதும் தோலின் நிறம் சற்று மங்கும். குழந்தை நன்றாகப் பால் குடிக்கத் தொடங்கியதும், உடல் எடை அதிகரிக்கும்போது, மேல் தோலும் மெருகேறும்.

கவனிக்க: மெருகேறும் என்பதற்கு அர்த்தம் நிறம் மாறும் என்பதல்ல. ஒருவித பளபளப்புத் தன்மை உண்டாகும். மற்றபடி, உடலின் நிறம் என்பது ஜீன்களில் எழுதப்பட்ட விஷயம். மாற்றியமைக்க இன்றைய அறிவியலில் வெற்றிகரமான கண்டுபிடிப்புகள் இல்லை. நிறம் மாற மேலே பெயின்ட் அடித்துக் கொண்டால்தான் உண்டு.

குழந்தையின் நிறம் எதுவாக இருந்தால் என்ன? ஆரோக்கியமாக வளருங்கள். அதுவே போதுமானது. எல்லோருடைய ஆலோசனைகளையும் கேட்டு, ஒருமாதக் குழந்தையின் மீது, எந்தவித பரீட்சார்த்த சோதனைகளையும் மேற்கொள்ள வேண்டாம்.

இந்த வருட குழந்தைகள் தினத்தில் தெரிந்துகொள்ள மற்றும் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு விஷயமாக இதைக்கொள்வோம்.

குழந்தை என்றாலே அழகுதான்... பிறகென்ன அழகான குழந்தை..?

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

செவ்வாய் 14 நவ 2017