மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 14 நவ 2017

தவறான படங்களைத் தேர்வு செய்தேன்!

தவறான படங்களைத் தேர்வு செய்தேன்!

‘என் கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் நான் கவனமாக இருக்கவில்லை’ என்று கூறியுள்ளார் நடிகர் ஆமிர் கான்.

‘ஆந்தக் ஹே அனாதக்’ திரைப்படத்தை ‘தி காட்ஃபாதர்’ என்ற என்ற பெயரில் மைக்கேல் கர்லோனின் பாத்திரத்தை ஆமிர் கான் ஏற்று நடித்தார். இது பற்றி அவர் நினைவு கூறும்போது, “இந்தப் படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு நான் அதிர்ச்சியடைந்தேன். அப்போதுதான் நான் படத்தைச் சரியாகச் செய்யவில்லை என்பதையும் உணர்ந்தேன்” என்று தெரிவித்துள்ளார். “நான் அந்தப் படத்தைப் பொறுத்தவரையில் மிகவும் மோசமான வேலையைச் செய்துள்ளேன். என் வாழ்க்கையின் தொடக்கத்தில்தான் சில நல்ல பாத்திரங்களை நான் தேர்ந்தெடுத்தேன். அதன் பிறகு நான் அதில் கவனம் செலுத்தவில்லை என்றே நினைக்கிறன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அப்படத்தை பற்றி அவருக்கு இருந்த மனநிலையை விவரிக்கும் அவர், “இந்தியப் பார்வையாளர்களை மனதில்வைத்து நான் படம் நடிக்கவில்லை என்று நான் உணர்ந்தேன். என் தேர்வு எப்படி இருந்தது என்றால் வெப்பத்தில் ஒரு கோட் அணிய வேண்டும் என்பது போல் என் தேர்வு இருந்தது. இப்போது நான் மிகவும் நேர்மையாகவும் தெளிவாகவும் படங்களையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுக்கத் தொடங்கியுள்ளேன்” என்று தன் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

செவ்வாய் 14 நவ 2017