மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 14 நவ 2017

துல்கர் படத்தைக் கைவிட்டது ஏன்?

துல்கர் படத்தைக் கைவிட்டது ஏன்?

துல்கர் சல்மான் படத்தைக் கைவிட்டதற்கான காரணத்தைத் தெரிவித்துள்ளார் நடிகரும் இயக்குநருமான பிரதாப் போத்தன்.

‘பெங்களூர் டேஸ்’ படத்தின் இயக்குநர் அஞ்சலி மேனனின் ஸ்கிரிப்ட்டில் துல்கர் சல்மானை வைத்து ‘லவ் இன் ஏன்ஜெங்கோ’ படத்தை இயக்குவதாக இருந்து, பின்னர் அந்தப் படத்தை ஒரு வருடத்துக்கு முன்னரே கைவிட்டார் பிரதாப் போத்தன். இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மலையாளத்தில் படம் எடுக்க தயாராக இருக்கும் பிரதாப், சமீபத்தில் மலையாள பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் அந்தப் படம் குறித்துப் பேசியுள்ளார்.

அதில், “தனக்கான ஸ்கிரிப்ட்டை அஞ்சலி ஒழுங்காக செய்யவில்லை. அதனால்தான் துல்கரை வைத்து இயக்க இருந்த படத்தைக் கைவிட்டேன். மீண்டும் அந்தக் கதையை துல்கரை வைத்து எடுக்கும் எண்ணம் இல்லை. நான் நன்றாக யோசித்த பின்னரே இந்தப் படத்தைக் கைவிட்டேன். இதுவரை இந்தியாவின் சிறந்த இயக்குநர்களால் இயக்கப்பட்டுள்ள நான், சிறந்த கதைகள் இல்லாவிட்டாலும் மோசமான கதைகளை எடுக்க முற்பட மாட்டேன்” என்று கூறியுள்ளார்.

தற்போது இயக்குநர் அஞ்சலி மேனன் பிரித்விராஜை வைத்து படம் இயக்கிவரும் நிலையில், பிரதாப்பும் மலையாளத்தில் புது முகங்களை வைத்து படம் ஒன்று இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

செவ்வாய் 14 நவ 2017