மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 14 நவ 2017

ரவிஷங்கரின் தலையீடு தேவையில்லை!

ரவிஷங்கரின் தலையீடு தேவையில்லை!

‘அயோத்தியா விவகாரத்தில் வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிஷங்கரின் ஈடுபாடு தேவையில்லாதது’ என்றிருக்கிறார் அசாதுதீன் ஓவைசி.

சமீபகாலமாக, பாபர் மசூதி – ராமர் கோயில் விவகாரத்தில் சமாதான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக ஏற்கெனவே தெரிவித்திருந்தார் வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிஷங்கர்.

நேற்று டெல்லியில் நடந்த ஒரு கருத்தரங்கொன்றில் கலந்துகொண்டவர், இதுபற்றி அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்திடம் பேசியதாகத் தெரிவித்தார். அதோடு, வரும் நவம்பர் 16ஆம் தேதியன்று அயோத்தி செல்லவிருப்பதாகவும், நீதிமன்றத்துக்கு வெளியே இந்தப் பிரச்னைகளைப் பேசித் தீர்ப்பதற்கான முயற்சியில் இறங்கியிருப்பதாகவும் கூறினார்.

இதற்கு தனது கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்திருக்கிறார் அகில இந்திய மஜ்லிஸ் இ இட்டஹதுல் முஸ்லிமின் கட்சித்தலைவர் அசாதுதீன் ஓவைசி. “அப்படி எந்தப் பேச்சுவார்த்தையையும் ஒப்புக்கொள்ளவில்லை என்று அகில இந்திய முஸ்லிம் வாரியம் ஒப்புக்கொண்டிருக்கிறது. அவர் மத்தியஸ்தம் செய்ய வேண்டிய தேவையில்லை. பட்டம் பறக்கவிடும் முயற்சியில், ரவிஷங்கர் ஈடுபட வேண்டாம்” என்றிருக்கிறார்.

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

செவ்வாய் 14 நவ 2017