மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 14 நவ 2017

பங்கேற்பு நோட்டுகள் முதலீட்டில் சரிவு!

பங்கேற்பு நோட்டுகள் முதலீட்டில் சரிவு!

பங்கேற்பு நோட்டுகள் மூலமாக இந்திய மூலதனச் சந்தையில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்குச் சரிந்துள்ளது.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வதற்காக பங்கேற்பு நோட்டுகள் (Participatory notes) வெளியிடப்படுகின்றன. இந்திய மூலதனச் சந்தையில் பங்கேற்பு நோட்டுகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 1.23 லட்சம் கோடி ரூபாயாக (செப்டம்பர் இறுதி வரை) இருந்துள்ளது. பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி விதித்துள்ள கடுமையான கட்டுப்பாடுகளாலேயே பங்கேற்பு நோட்டுகள் வாயிலான முதலீடுகள் சரிந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபியின் தகவல்களின்படி, செப்டம்பர் மாத இறுதி வரையில் இந்தியச் சந்தைகளில் இருந்த பங்கேற்பு நோட்டுகளின் மதிப்பு 1,22,684 ரூபாயாகச் சரிந்தது. ஆகஸ்ட் மாத இறுதியில் இந்தியச் சந்தைகளில் இருந்த பங்கேற்பு நோட்டுகளின் மதிப்பு 1,25,037 கோடி ரூபாயாக இருந்தது. பங்கேற்பு நோட்டுகள் மூலம் இந்தியாவில் முதலீடு செய்ய இந்தியர்கள், வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மற்றும் அவர்களின் நிறுவனங்களுக்கு ஏப்ரல் மாதத்தில் செபி தடை விதித்திருந்தது.

பங்கேற்பு நோட்டுகள் மூலம் அயல்நாடுகளுக்குக் கறுப்புப் பணம் பரிமாற்றம் செய்யப்படுகிறது. இதைக் கட்டுப்படுத்த ஒழுங்குமுறைக் கட்டமைப்பைப் பலப்படுத்தவே செபி இந்தத் தடையை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

செவ்வாய் 14 நவ 2017