மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 13 நவ 2017

நயனைப் புகழ்ந்த அமலா பால்

நயனைப் புகழ்ந்த அமலா பால்

`அறம்’ படத்தில் நயன்தாரா சிறப்பாக நடித்துள்ளதாகப் பாராட்டியுள்ளார் சக நடிகையான அமலா பால்.

நயன்தாரா நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் அறம். கோபி நயினார் இயக்கியுள்ள இப்படத்தில் நயன்தாரா மாவட்ட ஆட்சியராக நடித்திருந்தார். சமூக அக்கறையுடன் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு கதைக்களம் அமைக்கப்பட்டிருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றுள்ளதோடு வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், அறம் படக்குழுவினரை வெகுவாக பாராட்டி அமலா பால் தன் ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், “நயன்தாரா மற்றும் கோபி நயினாருக்கு என் பாராட்டுக்கள். பெரிய நட்சத்திர நடிகர்கள் நடிக்கும் மசாலா படங்களின் ஃபார்முலாவை அறம் மாற்றியுள்ளது. நல்ல திரைக்கதை, நல்ல விஷயங்கள், நல்ல நடிப்பு” என்று பாராட்டியுள்ளார்.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

திங்கள் 13 நவ 2017