மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 13 நவ 2017

மோடி மண்ணில் ராகுல்

மோடி மண்ணில் ராகுல்

வரும் டிசம்பர் மாதம் நடைபெறும் குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்காகச் சுற்றிச்சுழன்று பிரசாரம் செய்துவருகிறார் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி. இதன் ஒருபகுதியாக, இன்று மோடி பிறந்த மாவட்டத்திற்குச் செல்கிறார்.

குஜராத் சட்டப்பேரவைக்கான தேர்தல், வரும் டிசம்பர் மாதம் இரண்டுகட்டமாக நடைபெறவுள்ளது. இதற்காக, காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்கள் குஜராத்தை வட்டமிட்டு வருகின்றனர். குஜராத்தில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக, ’நவ்சர்ஜன் யாத்ரா’ என்ற பெயரில் மூன்று நாள் பிரசாரப்பயணம் மேற்கொண்டு வருகிறார் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி. செல்லுமிடமெல்லாம் பிரதமர் மோடி பற்றிய தகவல்களைத் தனது பேச்சில் குறிப்பிட்டு வருகிறார்.

இன்று குஜராத் மெஹ்சனா மாவட்டத்திலுள்ள பெஹ்சாராஜி கோவிலுக்குச் சென்றார் ராகுல்காந்தி. அப்போது, “நான் சிவபெருமானின் பக்தன். உண்மையாகவே, அவரை நம்புகிறேன். பாஜக என்ன சொன்னாலும், எனது நம்பிக்கையில் உறுதியாக இருக்கிறேன்” என்றார்.

இதற்கு முன்னதாக, பதான் நகரிலுள்ள வீர் மகாமாயா கோவில் மற்றும் ரன் கி வாவ் கிணறு உட்பட வடக்கு குஜராத்தின் தொன்மையான இடங்களைப் பார்வையிட்டார். குஜராத் மக்களின் அன்புமழையில் நனைவதாகச் சொன்ன ராகுல், தான் அதனைத் திருப்பித் தருவதாக வாக்குறுதி தந்தார்.

காங்கிரஸ் துணைத்தலைவரின் தேர்தல் பிரச்சாரப் பயணம் இன்று மெஹ்சனா மாவட்டத்திலுள்ள விஸ்நகரில் முடிவடைகிறது. பட்டேல் சமூகத்தினர் அதிகம் வாழும் இந்தப்பகுதியில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் தான், மோடியின் சொந்த ஊரான வாத் நகர் உள்ளது.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

திங்கள் 13 நவ 2017