மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 13 நவ 2017

விண்வெளிக்குச் சென்ற பூனைக்குச் சிலை!

விண்வெளிக்குச் சென்ற பூனைக்குச் சிலை!

இந்த அறிவியல் யுகத்தில் விண்வெளி சென்று வருவது என்பது பக்கத்து நாட்டிற்குச் சென்று வருவதுபோல மாறிவிட்டது.

முதன் முறையாக விண்வெளிக்குச் சென்ற பெருமையைப் பெற்ற பூனைக்கு பிரான்சில் வெண்கலச் சிலை அமைக்க லண்டனைச் சேர்ந்த மாத்யூ செர்ஜ் என்பவர் முயற்சி செய்து வருகிறார்.

கடந்த 1963ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதி ‘வெரோனிக் ஏஜிஐ’ என்ற ராக்கெட் மூலம் ஃபெலிக்கெட்டி என்ற பூனை ஒன்று 157 கி.மீ. தொலைவில் விண்வெளிக்கு அனுப்பப்பட்டு பிரஞ்சு விண்வெளி திட்டத்திற்காக சோதனை நடத்தப்பட்டது. பின்னர், 15 நிமிடத்துக்குப் பிறகு பத்திரமாக பாராசூட் மூலம் உயிருடன் தரை இறக்கப்பட்டது.

இதன் மூலம் முதன் முறையாக விண்வெளிக்குச் சென்ற பூனை என்ற பெருமையை பெற்றது. தற்போது இந்தப் பூனைக்கு பிரான்சில் வெண்கல சிலை அமைக்க முடிவு செய்த லண்டனைச் சேர்ந்த மாத்யூ செர்ஜ் அதற்கான பணிகளில் இருக்கிறார்.

இது குறித்து மாத்யூ செர்ஜ் கூறுகையில், ஆய்விற்காக 14 பூனைகளுக்குக் கொடுக்கப்பட்ட கடுமையான பயிற்சிக்குப் பின், இறுதியாக ஃபெலிக்கெட்டி என்ற பூனை தேர்வு செய்யப்பட்டது.

சோதனையில் 15 நிமிடம் விண்வெளியில் உயிருடன் இருந்த இந்தப் பூனைக்கு சிலை வைக்க முடிவு செய்து, அதற்காக அனைத்து இடங்களிலும், பிரச்சாரம் செய்து நிதி திரட்டினோம். அந்த வகையில், பிரச்சாரத்தின் மூலம், இதுவரை 24,000 பவுண்டுகள் கிடைத்துள்ளன என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

திங்கள் 13 நவ 2017