மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 13 நவ 2017

ஸ்மார்ட்போன் இறக்குமதி: இந்தியாவுக்கு அழுத்தம்!

ஸ்மார்ட்போன் இறக்குமதி: இந்தியாவுக்கு அழுத்தம்!

ஸ்மார்ட்போன்கள் மீது இந்தியா விதித்துள்ள இறக்குமதி வரியைக் குறைக்க உலக வர்த்தக அமைப்பில் இந்தியாவுக்கு அழுத்தம் அதிகரித்துள்ளது. விதிமுறைகள் வளைக்கப்பட்டதாக சில நாடுகள் புகார் தெரிவித்துள்ளன. வெளிப்படைத்தன்மை இல்லை என்று அமெரிக்கா தரப்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரக்கு வர்த்தகம் பற்றிய உலக வர்த்தக அமைப்பின் கூட்டத்திற்குப் பிறகு அதிகாரி ஒருவர் பிசினஸ் லைன் இதழிடம் பேசுகையில், இந்தியாவில் ஸ்மார்ட்போன்களுக்கு முழு இறக்குமதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றே அமெரிக்க தொழில் நிறுவனங்கள் நினைத்துக் கொண்டுள்ளன; ஆனால் இந்தியாவில் ஸ்மார்ட்போன்களுக்கு 10 சதவிகித இறக்குமதி வரி விதிக்கப்படுவது தொழில் நிறுவனங்களுக்கு எந்தவிதத்திலும் தெரியாது என்று அமெரிக்கப் பிரதிநிதி பேசியதாகக் கூறினார். வெளிப்படைத்தன்மை இல்லாத காரணத்தால் இந்தியாவில் விதிக்கப்படும் வரிக் கட்டமைப்பு பற்றி அறிந்துகொள்ளப் பன்னாட்டு நிறுவனங்கள் போராடுவதாகவும், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு மேலும் கடினமாக இருக்கும் என்றும் அமெரிக்கப் பிரதிநிதி பேசியுள்ளார்.

உலக வர்த்தக அமைப்பில் ஏற்படுத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப ஒப்பந்தத்தின் படி இந்தியா உள்ளிட்ட கையொப்பதாரர்கள் மொபைல் போன்கள் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்பச் சாதனங்களுக்கு வரி விதிக்கக் கூடாது. ஆனால் இந்தியாவோ உள்நாட்டுத் தொழிலைப் பாதுகாக்க ஸ்மார்ட்போன்களுக்கு 10 சதவிகிதம் இறக்குமதி வரியை விதித்தது. ஆக, தகவல் தொழில்நுட்ப ஒப்பந்தத்தின் கீழ் உள்ள பொறுப்புகளை இந்தியாவும் சீனாவும் நிறைவேற்றுமாறு உலக வர்த்தக அமைப்பில் ஜப்பான், ஐரோப்பிய யூனியன், கனடா, தைவான், நார்வே, வியட்நாம், தாய்லாந்து, சிங்கப்பூர், கொரியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் அழுத்தம் கொடுத்துள்ளன.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

திங்கள் 13 நவ 2017