மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 13 நவ 2017

அறிவுத்தலைநகர் சென்னை!

அறிவுத்தலைநகர் சென்னை!

நீட் உள்ளிட்ட தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்ள, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கான பயிற்சி மையங்களை இன்று தொடங்கிவைத்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இந்த விழாவில் பேசியபோது ‘இந்தியாவின் அறிவுத் தலைநகர் சென்னை’ என்றார்.

நீட், ஐஐடி உள்ளிட்ட தேசிய அளவில் மாணவர்களுக்கு நடத்தப்படும் நுழைவுத்தேர்வுகளை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எதிர்கொள்ள, தமிழகம் முழுவதும் 412 இடங்களில் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.

அதன்படி, இன்று தமிழகம் முழுவதும் அமைந்திருக்கும் பயிற்சி மையங்களை காணொலி மூலம் திறந்துவைத்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, ”தமிழக அரசின் கல்வித்திட்டம் எந்த மாநிலத்திற்கும் சளைத்தது அல்ல. போட்டித் தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ள, இந்த மையங்களில் இலவச பயிற்சி அளிக்கப்படும். இந்தியாவின் அறிவுத்தலைநகராக சென்னையை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

திங்கள் 13 நவ 2017