மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 13 நவ 2017

கம்பெனி ரெண்டு ஓனர் ஒருத்தரு... - அப்டேட் குமாரு

கம்பெனி ரெண்டு ஓனர் ஒருத்தரு... - அப்டேட் குமாரு

‘என்ன சார் எல்லா இடத்துலயும் ரெய்டு நடக்குதுங்குறாங்க, ஆனா எதும் கண்டுபிடிச்ச மாதிரி தெரியலயே’ன்னு ஒரு வாட்ஸப் மெஸேஜ். யோவ், வதந்தி பரப்ப மேட்டர் வேணும்னா நேரா கேளு. அதைவிட்டுட்டு வாட்ஸப்ல சொன்னாங்கன்னுலாம் வராத. எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழான்னு சொல்லி செய்த கூத்துக்குல்லாம் அசிங்கப்பட்டது போதும்னு திசைதிருப்பிவிடத்தான் ரெய்டு பண்றாங்கன்னு எனக்கும்தான் மெஸேஜ் வந்துது. அதையெல்லாம் கண்டுக்கிட்டா வேலைக்காகுமா? வாட்ஸப் சரியா வேலை செய்யலைன்னு ஃபேஸ்புக்ல போஸ்ட் போட்டதுக்கு என்னை 3 நாள் ஒதுக்கிவெச்சிட்டானுங்கன்னு நானே கடுப்புல இருக்கேன் இதுல இவங்க வேற. இதுக்குத்தான் ரெண்டு கம்பெனிக்கு ஒருத்தரே ஓனரா இருக்கக்கூடாதுன்னு சொல்றது. புரியுதா, கம்பெனி ரெண்டு ஓனர் ஒன்னு. அப்டேட்டைப் படிங்க, நான் போய் வெள்ளைக்காரன் காலை புடிச்சு அக்கவுண்டை மீட்டுட்டு வர்றேன். ‘மார்க் சுக்கர்பெர்க்கை நடுங்க வைத்த அப்டேட் குமாரே’ன்னு பேனர் ஆர்டர் குடுத்தேன் இன்னும் வரல. ஆள் வந்தா புடிச்சு வைங்க வந்திடுறேன்.

@nayagan_am

இதுவரை எந்த லஞ்ச ஒழிப்பு போலிஸும் லஞ்சம் வாங்கி மாட்டியது இல்லை

எந்த வருமான வரித்துறை அதிகாரி வீட்டிலும் ரெய்டு நடந்ததில்லை...

ஆக........

@imparattai

நிமிடகதை:நான் கணவனை இழந்த விதவை என்றாள், தன்னிடம் காதலை சொன்னவனிடம். ஆனால் வயதையும் வாழ்க்கையையும் இன்னும் நீ இழக்கவில்லை என்றானவன்.!

@SingHem

ஜெயா டிவியில் சோதனை நடத்தி அது சசிகலா குடும்பத்தினுடையது என உணர்த்திவிட்டீர்.

அப்புறம் அதைக் கைப்பற்ற நினைப்பது அபகறிப்பது ஆகும்

@amyarun

நாணயமில்லா மனிதனிடம் கூட நாணயமாய் நடக்கும் பழக்கம் இருக்கிறது #நேர்மையானஏழை

நாணயங்கள் உள்ள சில மனிதரிடம் நாணயமாய் நடக்கும் பழக்கம் இருப்பதில்லை #நேர்மையற்றசெல்வந்தன்

@saravananucfc

தவறுகளை மேல போட்டு குடுத்த அதிகாரிகளைவிட, மேல போட்டுக்குடுங்கனு கேட்டு தவறுகளுக்கு காரணமான அதிகாரிகளே அதிகம்.

@Srilaksman0

தெரியாதவர்களை விட தெரிந்தவர்களிடமே மிகவும் கவனமாக நடந்து கொள்ளவும் வேண்டும் - கவனமாக பேசவும் வேண்டும்.

@Chellakutty_Dee

காதலியை ஆபாசமாக படம் எடுத்து வாட்ஸ்ஆப்பில் பரப்பிய காதலனை உயிரோடு புதைத்த பெண்ணின் சகோதரன்

இதுக்கு தான் அண்ணன் தம்பிங்களோட பிறக்கணும்னு சொல்றது அண்ணேண்டா

@aashiqali500

உருவத்தை வைத்து யாரையும் எடை போடக்கூடாதென அனுபவப்பூர்வமாக உணர்ந்த நாள் இன்று!😂

"பெரிய" வெங்காயம் கிலோ 50 ரூபாய்!

"சின்ன" வெங்காயம் கிலோ 140 ரூபாய்!

@inban_ofl

என்னங்கடா..நடிகனோட மனைவிக்கெல்லாம் பிறந்தநாள் கொண்டாடுறீங்க ...

உஸ்ஸ் ..ப்பா

@ajay_aswa

நம் தாத்தா பாட்டி அவர்களின் நினைவாக நமக்கு விட்டுச்சென்றது அவர்களின் புகைப்படம்

நம் சந்ததியினருக்கு நம் நினைவாக விட்டுச்செல்வது

ட்விட்டர்_பேஸ்புக் - அக்கவுண்ட்

@palanikannan04

பிக்பாஸ்,மெர்சல் பார்ப்பதற்காக மடிக்கணிணிகள் வழங்கவில்லை- தம்பிதுரை எம்.பி

நீங்க மட்டும் என்ன..?எம்.பி வேலைய மட்டுமா பாக்குறீங்க..?

@Aruns212

'ஊருக்குள்ள பேசிக்கிட்டாங்க!' என்பது சென்ற தலைமுறை வதந்தி. 'வாட்ஸ் அப்பில் வந்தது' இன்றைய தலைமுறை வதந்தி.

@Maga_raja

ஒருத்தர் sliding door கிராஸ் பண்ணி போன பிறகு,

அது க்ளோஸ் ஆகுறதுள்ள,

நாம வேகமா போய் அதை மறுபடியும் ஓபன் ஆக வைக்கனும்,

சின்ன சின்ன இலக்குகள்,

சின்ன சின்ன சந்தோசங்கள்!!!

-லாக் ஆஃப்.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

திங்கள் 13 நவ 2017