மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 13 நவ 2017

வெண்புள்ளியும் சித்த மருத்துவ தீர்வும்!

வெண்புள்ளியும் சித்த மருத்துவ தீர்வும்!

மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் மற்றும் வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கமும் இணைந்து வெண்புள்ளிகளுக்கு இலவச சித்த மருத்துவ முகாமைத் தாம்பரத்தில் தேசிய கரோடியா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. முகாமிற்கு வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கத்தின் செயலாளர் கே.உமாபதி தலைமை தாங்கினார். மருத்துவ முகாமை மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தின் டைரக்டர் ஜெனரல் பேராசிரியர் மருத்துவர் ஆர்.எஸ்.ராமசாமி தொடங்கி வைத்தார்.

“இது தொற்று வியாதி அல்ல. இந்த நோயை முறையாக சித்த மருந்துவம் மூலம் குணப்படுத்தலாம்” என்றார் ஆர்.எஸ்.ராமசாமி.

சித்த மருத்துவர் கி.கலைச்செல்வி, வெண்புள்ளிகள் குறித்து விவரமாக அவர் பேசினார். அதன் சுருக்கம் வருமாறு:

வெள்ளையாக இருக்க வேண்டும், பொலிவான, அழகான சருமம் வேண்டும் என்பதுதான் அனைவரின் ஆசை. நிறத்தை நம்மால் மாற்ற முடியாது. ஆனால், ஆரோக்கியமாகப் பராமரிப்பதன் மூலம் பொலிவான தோற்றத்தைப் பெற முடியும். கறுப்போ சிவப்போ தோல் ஆரோக்கியமாக இருப்பதுதான் முக்கியம். தோலில் ஏற்படும் பல பிரச்சினைகளுக்கும் பக்கவிளைவுகள் இல்லாத எளிய தீர்வுகள் சித்த மருத்துவத்தில் உள்ளன.

நிறம் குறைந்த நிலை (ஹைப்போடிக்மடேஷன்)

பொதுவாக நிறம் குறைந்த நிலையைத்தான் வெண்புள்ளி என்று அழைக்கிறோம். ஆனால் வெண்புள்ளி என்பது வேறு. தோலின் நிறத்திற்குக் காரணம் சிக்யூட்டரில் சுரக்கும் மெலனின் என்ற நிறமிதான். இது குறையும்போது தோலின் வெண்மை நிறம் பெருகிறது.சிலர் வெண்மையாகத் தோன்றுவதற்கும் இந்த நிறமி சுரப்பி குறைவாக இருப்பதுதான் காரணம். சில நோய் நிலைகளிலும் வெண்மை நிறம் தோன்றும்.

வெண்புள்ளி (விட்டிலிகோ - vitiligo)

வெளுத்த புள்ளிகள் அல்லது சிறு தடித்த புள்ளிகள் வேறுபட்ட வடிவங்களிலும் அளவுகளிலும் முகத்தில் காணப்படும். இதில் முகம் மற்றும் பாதத்தின் மேல்புறமும் கைகளின் மேல்புறமும் இடுப்பு, கால் பகுதிகளிலும் காணப்படும். சில சமயம் முடியும் வெண்மை நிறம் அடைய வாய்ப்பு இருக்கிறது. இது உதடுகளிலும் தோன்றும். குடல் கிருமி, தோல் நிறமி குறைவு, ரத்தச் சிவப்பு அணுக்கள் குறைவாக இருப்பது ஆகியவைதான் இதற்குக் காரணமாகக் கருதபடுகின்றன.

முகப்பரு

பதின் பருவத்தில் இரு பாலருக்கும் முகத்தில் பருக்கள் அதிமாகத் தோன்றும். பருக்கள், தேவையற்ற கொழுப்பால் ஆனவை. உள்ளே சீழ் முளையுடன், வீக்கத்துடன் காணப்படும். பருக்கள் உடைந்தால், இதில் உள்ள நீரால் சருமத்தின் பிற பகுதிகளுக்கும் முகப்பரு பரவும். பருக்கள் மறைந்த பின்னர், அந்த இடத்தில் கருநிறத் தழுப்புகள் உண்டாகும்.

வெளி மருந்து: குளிர்ந்த, சுத்தமான நீரில் முகத்தை அடிக்கடி கழுவ வேண்டும். பருக்களை உடைக்கக் கூடாது. பருக்களைப் போக்க, கருஞ்சீரகம், சீரகத்தை பசும்பாலில் அரைத்து, முகத்தில் தடவலாம். சங்கை அரைத்துப் பூசலாம். புனுகை அரைத்துப் பருவின் மீது பூசலாம்.

உள்மருந்து: பச்சைக் காய்கறிகள், கீரைகளை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மலச்சிக்கல் ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும். போதுமான அளவு நீர் அருந்த வேண்டும்.

தோல் வறட்சி

சருமத்தில் ஈரப்பதம் குறைவதால், சருமத்தில் வறட்சி ஏற்படும். இதனால் சருமத்தில் வெண்ணிறக் கோடு ஏற்படும். இது, சில சமயம் சொறி சிரங்காக மாற வாய்ப்பு உள்ளது.

வெளிமருந்து: எண்ணெய் குளியல், அருங்கன் தைலம், திரிபலா தைலம் ஆகிவற்றைத் தடவலாம்.

உள்மருத்துவம்: பால், வெண்ணெய், மாமிசம் ஆகியவற்றை உண்ணலாம்.

காணக்கடி

சிறு பூச்சிகள், சிலந்தி போன்ற விஷப் பூச்சிகள் கடிப்பதால், தோலில் அரிப்புடன்கூடிய தடிப்புகள் தோன்றி மறையும்.

உள்மருந்து: பறங்கிப் பட்டை, பலகரை பஷ்பம், சங்கு பஷ்பம் ஆகியவற்றைக் கலந்து சாப்பிடலாம்.

வெளி மருந்து: அருங்கன் தைலம், புங்கன் தைலம் பூச வேண்டும்.

மருல்

முகம், கை, காலில் நாய் முள் போன்ற முட்களுடன்கூடிய பருக்களாக காணப்படும்.

வெளி மருந்து: சவுக்காரம், சுண்ணாம்பு ஆகியவற்றை அரைத்து, குதிரைவாலின் முடியை இறக்கி அதில் கட்டிவிடலாம்.

பாலுண்ணி

முகத்தில் சில மருக்கள் வெண்மையாய் மொழுமொழுவென இருக்கும். உள்ளே பால் போன்ற திரவம் நிரம்பி இருக்கும்.

வெளி மருந்து: அமிர்த வெண்ணெய், நலங்குமாவு, சந்தனம், வெட்டிவேர், விளாமிச்சு வேர், கார்போக அரிசி, கிச்சிலிக் கிழங்கு, பாசிப்பயிறு, கஸ்தூரி மஞ்சள், கோரைக் கிழங்கு, ரோஜா இதழ் மற்றும் ஆவாரம்பூ ஆகிய அனைத்தையும் சமஅளவு எடுத்து, சுத்தம் செய்து அரைத்துக்கொள்ளவும். இதைப் பாலில் கலந்து பூசினால் பலன் கிடைக்கும்.

தேமல்

தேமல், வட்டமாகப் பல இடங்களிலும் தோன்றிப் பரவிக்கொண்டு வரும். வரம்பு கட்டி இருக்கும். தோலின் நிறம் மாறும். அரிப்புடன் தவிடுபோல் உதிரும். இது கறுப்பாகவும், சிவப்பாகவும் காணப்படும். சிலவற்றை அழகுத் தேமல் என்பார்கள்.

வெளிமருந்து: தேங்காய் எண்ணெயுடன் சீமை அகத்தி இலைச் சாற்றைக்

கலந்துப் பூசலாம்.

உள்மருந்து: கந்தகம் சேர்த்த மருந்துகள்.

இந்த முகாமில் வெண்புள்ளிகளால் பாதிக்கப்பட்ட பலர் பங்கேற்று சிகிச்சையும் ஆலோசனையும் பெற்றுச் சென்றனர். மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன. 044-22265507 / 22265508 ஆகிய தொலைபேசி எண்களிலோ அல்லது 9840052464 என்ற செல்போன் எண்ணிலோ தொடர்புகொண்டு மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

திங்கள் 13 நவ 2017