மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 13 நவ 2017

அமைச்சர்கள் பதவிநீக்கம்: மனு தள்ளுபடி!

அமைச்சர்கள் பதவிநீக்கம்: மனு தள்ளுபடி!

அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.சி.வீரமணி இருவரையும் பதவி நீக்கம் செய்யக்கோரி ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி மனோகரன் தொடர்ந்த வழக்கைச் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தபோது ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார், நலமாக உள்ளார் என்பது போன்ற தகவல்களை அதிமுக அமைச்சர்கள் அவ்வப்போது ஊடகங்களில் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் செப்டம்பரில் நடந்த அதிமுக பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார் என்று பொய் சொன்னோம் என்றார். இதே கருத்தை அமைச்சர் கே.சி.வீரமணியும் கூறினார்.

இதையடுத்து அமைச்சர்கள் செய்துகொண்ட பதவிப் பிரமாணத்துக்கு எதிராக பொய்க் கருத்து கூறியுள்ளனர். இது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது எனவே இருவரின் பதவியையும் ரத்து செய்ய வேண்டும் என்று ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி மனோகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இன்று விசாரணைக்கு வந்த வழக்கை நீதிபதி ரவிச்சந்திரபாபு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஏற்கனவே விசாரணைக் கமிசன் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. மேலும், இது ஆளுநரின் அதிகாரத்துக்கு உட்பட்டது. இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி நீதிபதி இந்த வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளார்.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

திங்கள் 13 நவ 2017