மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 13 நவ 2017

சின்னம் : எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல்!

சின்னம் : எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல்!

இரட்டை இலை தொடர்பாக இரு அணிகளின் வாதமும் நிறைவடைந்துள்ள நிலையில், இரு தரப்பினரும் இன்று எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்துள்ளனர்.

இரட்டை இலை யாருக்கு என்பதை நவம்பர் 10 ஆம் தேதிக்குள் முடிவு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி சின்னம் தொடர்பான விசாரணையை தேர்தல் ஆணையம் தொடங்கியது. ஒருங்கிணைந்த அணிகள் தரப்பு, தினகரன் தரப்பு என இரு அணியினர் ஏழு கட்டங்களாக காரசாரமான வாதத்தினையும், இரட்டை இலை தங்களுக்குத்தான் வழங்க வேண்டும் என்ற வாதத்தினையும் முன்வைத்தனர்.

கடந்த 8 ஆம் தேதி நிறைவடைந்த வாதத்தின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்த தலைமை தேர்தல் ஆணையம். வாதங்கள் மீதமிருப்பின் 13ஆம் தேதி எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யலாம் என்ற அவகாசத்தையும் வழங்கியது.

தேர்தல் ஆணையத்துக்கு, உச்ச நீதிமன்றம் வழங்கிய அவகாசம் 10ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், அன்றைய தினத்தில் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது குறித்து தேர்தல் ஆணையம், நீதிமன்றத்தில் ஆவணங்களை தாக்கல் செய்தது.

இந்த சூழ்நிலையில் இன்று ( நவம்பர் 13) ஒருங்கிணைந்த அணிகளின் சார்பில், தேர்தல் ஆணையத்தில் எழுத்துப்பூர்வமான வாதம் சமர்ப்பிக்கப்பட்டது. 100க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட இந்த ஆவணத்தை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்தார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்," இரட்டை இலை எங்களை அணிக்குத்தான் நிச்சயம் கிடைக்கும்" என்று தெரிவித்தார்.

தினகரன் தரப்பிலிருந்து 111 பக்கங்கள் கொண்ட எழுத்துப்பூர்வ வாதத்தை வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டி தாக்கல் செய்தார். அதில் கூடுதல் அவகாசம் தேவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

திங்கள் 13 நவ 2017