மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 13 நவ 2017

மீண்டும் தாய்லாந்து செல்லும் வைபவி

மீண்டும் தாய்லாந்து செல்லும் வைபவி

கௌதம் கார்த்திக்கு ஜோடியாக நடித்து வரும் `இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக தாய்லாந்து செல்ல இருக்கிறார் நடிகை வைபவி சாண்டில்யா.

`ஹர ஹர மகாதேவகி’ படத்தைத் தொடர்ந்து சந்தோஷ் பி.ஜெயகுமார் இயக்கி வரும் படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’. ‘ஹர ஹர மகாதேவகி’யில் நடித்த கௌதம் கார்த்திக்கே இப்படத்திலும் நடித்து வருகிறார். கதாநாயகியாக சந்தானத்துடன் `சர்வர் சுந்தரம்’, ‘சக்க போடு போடு ராஜா’ ஆகிய படங்களில் நடித்த வைபவி சாண்டில்யா நடிக்கிறார். இவர்களுடன் சந்திரிகா ரவி, யாஷிகா ஆனந்த், மொட்டை ராஜேந்திரன், கருணாகரன், பால சரவணன், மதுமிதா ஆகியோரும் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை தாய்லாந்தில் நடத்தி முடித்துவிட்டு படக்குழுவினர் சென்னை திரும்பியுள்ளனர். அதனைத் தொடர்ந்து தற்போது சென்னையில் ஒரு பாடலுக்கான படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள். இந்த படப்பிடிப்பை முடித்து விட்டு மீண்டும் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக படக் குழுவினர் தாய்லாந்து செல்லவிருக்கின்றனர்.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

திங்கள் 13 நவ 2017