மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 13 நவ 2017

செம்மலை மனு: உச்சநீதிமன்றம் தற்காலிக நிராகரிப்பு!

செம்மலை மனு: உச்சநீதிமன்றம் தற்காலிக நிராகரிப்பு!

சபாநாயகரின் அதிகார வரம்பு குறித்து சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்க முடியாது என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செம்மலை, மாணிக்கம் ஆகியோர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில்... சென்னை உயர் நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கை தடை செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துவிட்டது.

ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட 12 சட்டமன்ற உறுப்பினர்கள் கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை வாக்கு கோரியபோது எதிர்த்து வாக்களித்தனர். இது அதிமுக கொறாடா உத்தரவை மீறிய செயல் அதனால் அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக கொறடா சக்கரபாணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அது விசாரணையில் இருக்கிறது.

இதற்கிடையில், ’இந்த வழக்கு சபாநாயகரின் அதிகார வரம்பை கேள்வி கேட்கிறது. ஏற்கனவே இதே விவகாரம் தொடர்பாக ஆந்திர எம்.எல்.ஏ. ஒருவர் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் விசாரணையில் இருக்கிறது. எனவே இவ்வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரிப்பதற்கு தடை விதித்து, உச்ச நீதிமன்றமே அந்த ஆந்திர வழக்கோடு சேர்த்து விசாரிக்க வேண்டும் ‘ என்று கோரி செம்மலை, மாணிக்கம் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தனர்.

அந்த மனு இன்று காலை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதுபற்றி மின்னம்பலத்தில் இன்று காலை 7 மணி பதிப்பில் தகுதி நீக்க வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை’ என்ற தலைப்பிட்டு விரிவாகப் பதிவு செய்திருந்தோம்.

இந்நிலையில் இன்று காலை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வின் முன் இம்மனு விசாரணைக்கு வந்தது.

அப்போது செம்மலை தரப்பில், ‘சபாநாயகரின் அதிகார உச்சரவரம்பை பற்றி உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு நடக்கும்போது தனியாக சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்கக் கூடாது. எனவே இந்த வழக்கை உச்ச நீதிமன்றமே எடுத்து விசாரிக்க வேண்டும். அதை ஒட்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் நடக்கும் இவ்வழக்கு விசாரணையை தடை செய்ய வேண்டும்’ என்று வாதாடினார்கள்.

இதற்கு திமுக கொறடா சக்கரபாணி தரப்பில், ‘’ஆந்திர எம்.எல்.ஏ. தொடுத்த வழக்கின் தன்மை வேறு. நாங்கள் தமிழக சபாநாயர் பற்றி தொடுத்த வழக்கின் தன்மை வேறு. உயர் நீதிமன்ற விசாரணையை தடுத்துத் தாமதம் செய்யும் வகையில் இந்த மனு செய்யப்பட்டுள்ளது. எனவே சென்னை உயர் நீதிமன்ற விசாரணைக்கு தடைவிதிக்கக் கூடாது’’என்ற வாதம் முன் வைக்கப்பட்டது.

இதைக் கேட்ட உச்ச நீதிமன்றம், ‘’செம்மலை, மாணிக்கம் ஆகியோர் தொடுத்த மனுவை இரண்டு வாரம் கழித்து விசாரிக்கிறோம். அதுவரை சக்கரபாணி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க முடியாது’’என்று கூறியிருக்கிறது.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

திங்கள் 13 நவ 2017