மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 13 நவ 2017

சமந்தா-நாகசைதன்யா பிரமாண்ட ரிசப்ஷன்!

சமந்தா-நாகசைதன்யா பிரமாண்ட ரிசப்ஷன்!

சமந்தா - நாகசைதன்யா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழ், தெலுங்கு திரையுலகை சேர்ந்த பலரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நீண்ட நாட்களாக காதலித்து வந்த நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவும் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். நாகார்ஜுனாவின் மகனான நாகசைதன்யா இந்து மதத்தை சேர்ந்தவர். தமிழ் நடிகையான சமந்தா கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் கோவாவில் கடந்த அக்டோபர் 6, 7 தேதிகளில் நடந்தது. இதில் நாகசைதன்யா மற்றும் சமந்தாவின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் திரையுலகத்தினர் சிலரும் பங்கேற்றனர்.

அதனைத் தொடர்ந்து சமந்தாவும் - நாகசைதன்யாவும் தேனிலவுக்கு வெளிநாடு சென்று திரும்பினார்கள். மேலும் சென்னையில் உள்ள பிரபல ஹோட்டலில் நெருங்கிய நண்பர்களுக்கு விருந்து அளித்தனர். இந்நிலையில், சமந்தா - நாகசைதன்யாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஐதராபாத்தில் நேற்று (நவம்பர் 12) நாகார்ஜுனாவுக்கு சொந்தமான என். கன்வென்சன் மையத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

திங்கள் 13 நவ 2017