மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 13 நவ 2017

வருமான வரி சோதனை: புகழேந்தி ஆஜர்!

வருமான வரி சோதனை: புகழேந்தி ஆஜர்!

வருமான வரித்துறை சோதனை நடந்தது தொடர்பாக சம்மன் அனுப்பப்பட்டதையடுத்து, தினகரன் ஆதரவாளர் புகழேந்தி சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் இன்று ஆஜரானார்.

சசிகலா குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை குறிவைத்து நடத்தப்பட்ட வருமான வரித்துறையின் சோதனை, ஐந்தாவது நாளாக இன்றும் சில இடங்களில் தொடர்ந்து வருகிறது. 190 இடங்களில் நடைபெற்ற சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சோதனையில் சசிகலாவின் உறவினர்கள், வழக்கறிஞர், ஜோசியர் தவிர்த்து தினகரனின் தீவிர ஆதரவாளர்களின் தங்க.தமிழ்செல்வன் உதவியாளர் இல்லம், பெங்களூருவிலுள்ள வழக்கறிஞர் புகழேந்தி ஆகியோரின் இல்லங்களில் சோதனை நடத்தப்பட்டது.

இதற்கிடையே சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து 13ஆம் தேதி வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று புகழேந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

திங்கள் 13 நவ 2017