மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 13 நவ 2017

பாஜக மீது மக்கள் கோபம்!

பாஜக மீது மக்கள் கோபம்!

மத்தியப் பிரதேச இடைத்தேர்தலில் கிடைத்திருக்கும் தோல்வி, பாஜக மீது மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் அவநம்பிக்கையையே காட்டுகிறது என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியிருக்கிறார்.

மத்தியப் பிரதேச மாநிலம் சித்ரகூட் தொகுதி எம்எல்ஏ பிரேம் சிங் சமீபத்தில் மறைந்தார். இதனையடுத்து, கடந்த நவம்பர் 9ஆம் தேதியன்று அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 12 வேட்பாளர்களில் 9 பேர் சுயேச்சையாகப் போட்டியிட்டனர். இதில் காங்கிரஸைச் சேர்ந்த நிலான்ஷு சதுர்வேதி 14 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் சங்கர்தயாள் திரிபாதியைத் தோற்கடித்தார்.

இதனைக் குறிப்பிட்டுப் பேசியிருக்கும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், “தேர்தல் முடிவு காற்று திசைமாறிவிட்டதைக் காட்டுகிறது. இனி குஜராத்திலும் அது தொடரும்” என்றார். “தேர்தல் முடிவு பாஜக மீதான மக்களின் அவநம்பிக்கையையும் எதிர்ப்பையும் காட்டுகிறது. பணமதிப்பழிப்பு, ஜிஎஸ்டி பற்றிய உண்மை நிலையினை மக்கள் உணர்ந்துவிட்டார்கள்” என்று விமர்சித்திருக்கிறார்.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

திங்கள் 13 நவ 2017